×

தமிழகத்தில் ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு...

 
lockdown

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முன்பு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய துவங்கியது. அதன்பின்,  மேலும் ஒரு வாரம் அதாவது ஜூன் 14ம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த ஊரடங்கு மீண்டும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன் 21ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கொரோனா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சலூன் கடை, டாஸ்மாக் கடை, அழகு நிலையங்கள், மிதி வண்டி மற்றும் இருசக்கர வாகனங்களை பழுது நீக்கும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இ பாஸ் பதிவுடன் டாக்சி உள்ளிட்ட வாடகை வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி

உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டுத் திடல்களிலும் நடைபயிற்சிக்கு அனுமதி

From around the web

Trending Videos

Tamilnadu News