×

’விஸ்வாசம்’ படத்தை விளம்பரத்திற்காக பயன்படுத்திய தமிழக காவல்துறை

தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய ’விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் காட்சி ஒன்றை அப்படியே எடுத்து தமிழக காவல்துறை ’காவலன்’ என்ற செயலி குறித்த விளம்பரத்திற்கு பயன்படுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

தேனி மாவட்ட காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ’விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் மகளை சில ரவுடிகள் துரத்தி வரும் பொழுது அவர் தனது தாயாரான நயன்தாராவுக்கு போன் செய்யும் காட்சியையும் அதற்கு நயன்தாரா கூறும் ஆலோசனையையும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்த உள்ளது 

அந்த காட்சியில் அஜித் மகள் தன்னை யாரோ துரத்தி வருவது போல் கூறுவதற்கு நயன்தாரா உடனே ’காவலன் செயலியை ஆன் செய்’ என்று கூற அதற்கு அந்த சிறுமி ’சரி’ என்று கூறுகிறார். உடனடியாக போலீஸ் வந்து அந்த சிறுமியை காப்பாற்றுவது போன்ற விளம்பரம் அமைக்கப்பட்டுள்ளது 

’விஸ்வாசம்’ படத்தின் காட்சியை பயன்படுத்தி இந்த விளம்பரம் அமைக்கப்பட்டுள்ளதால் மிக விரைவாக பெண்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் இந்த விளம்பரம் போய் சேர்ந்து உள்ளது என தேனி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

From around the web

Trending Videos

Tamilnadu News