டேய் அவரு ஜட்ஜுடா… வச்சு செய்யும் தமிழர்கள்!

தமிழ் தெரியாது போடா என போஸ்ட் போட்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பம் முதலே தமிழ்நாடு மும்மொழிக் கொள்கைக்கும், இந்தி திணிப்புக்கும் எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் தமிழர்களைக் கேலி செய்யும் விதமாக தமிழர்கள் இந்தி கற்றுக் கொள்ளாததால் நிறைய இழப்புகளை சந்தித்து வருவதாகவும் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பேசி வந்தார் அவர். அதனால் அவரை நெட்டிசன்கள் கேலி செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ‘இந்தி தெரியாது போடா’ ட்ரண்ட் ஆனதால் கடுப்பானார். இதனால் அதற்கு பதிலளிக்கும் விதமாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘தமிழ் தெரியாது போடா’ எனப் பதிவு செய்தார். அதையும் கேலி செய்யும் விதமாகதான் ‘அதை ஏன் தமிழில் பகிர்ந்துள்ளீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ ‘உங்களுக்கு தமிழ் தெரியாததால் நாங்கள் உங்கள் மீது தமிழை திணிக்க மாட்டோம். அது போல நீங்களும் எங்கள் மேல் இந்தியைத் திணிக்காதீர்கள்’ எனக் கூறியுள்ளனர்.