×

கிளாஸ்ல இருக்குறது சரக்கா? - நடிகை வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை...

 
கிளாஸ்ல இருக்குறது சரக்கா? - நடிகை வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை...

நடிகர் அருண் விஜய் நடித்த முன்னணி ‘தடம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து மிகவும் அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ‘தாராள பிரபு’ படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்பு அமையவில்லை.

எனவே, கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வேலைக்கு ஆகும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ ஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கண்ணாடி முன்பு நின்று போஸ் கொடுக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். ஆனால், அவரின் முன்பு ஒரு கண்ணாடி கோப்பையில் ஒயின் நிரப்பப்பட்டுள்ளது. எனவே, நடிகையை பார்க்காமல் ‘என்னமா சரக்கு அடிக்கிறியா?’ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News