×

திருமணம் எப்போ? உஷ்ஷ்.. சத்தமா பேசாதிங்க... இப்போ டேட்டிங் மட்டும் தான்... 

ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்கள் என்று நடிக்கும் எண்ணிக்கை 2 அல்லது 3 படங்கள் என்று குறையும்போது திருமணத்துக்கு தயாராவேன் " என்று கூறியுள்ளார்.

 
47562851

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி.

தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வரும் நடிகை டாப்ஸி, தமிழில் தற்போது ஜனகனமன எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் என்பவரும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தனது காதலர் குறித்து நடிகை டாப்சி வெளிப்படையாக பேசியுள்ளார்:

" சினிமா துறையில் இருப்பவரை காதலிக்க விரும்பவில்லை. எனது சொந்த வாழ்க்கையும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மத்தியாஸ் எனக்கு நெருக்கமான வட்டாரத்திற்குள் இருக்கிறார்.

அதனால் அவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறேன். திருமணம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்கள் என்று நடிக்கும் எண்ணிக்கை 2 அல்லது 3 படங்கள் என்று குறையும்போது திருமணத்துக்கு தயாராவேன் " என்று கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News