×

திருமணத்தில் பல கண்டீஷன் போட்ட டாப்சி

டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்போதே பாலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

 
6462801d-73ed-4320-b983-ce538865c8d2

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை டாப்சி.

இவர் சமீபத்தில் தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில் " எனது பெற்றோருக்கு பிடிக்காதவரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை காதலிப்பவர்களிடம் இந்த நிபந்தனையை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறேன்.

எனது திருமணம் குறித்து பெற்றோர் கவலைப்படுகின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படியும் வற்புறுத்துகின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடுவேனோ என்று அவர்களுக்கு வருத்தம் உள்ளது ". என டாப்சி கூறினார்.

இதனால் நடிகை டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்போதே பாலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News