×

15 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கிய தேநீர்க் கடைககாரர்! இப்போது சிறைக்குள்!

பள்ளிக்கு செல்லும் பெண்ணிடம் பழகி ஆசைவார்த்தைக் காட்டி அவரைக் கர்ப்பமாக்கிய தேநீர் கடை உரிமையாளர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்.

 

பள்ளிக்கு செல்லும் பெண்ணிடம் பழகி ஆசைவார்த்தைக் காட்டி அவரைக் கர்ப்பமாக்கிய தேநீர் கடை உரிமையாளர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்.

கொடைக்கானலில் குடும்பத்தினருடன் வசித்து வரும் 15 வயது சிறுமி தன் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள தேநீர் கடை வைத்திருக்கும் அஸ்கர் அலி என்பவருடன் நட்பாக பழக ஆரம்பித்துள்ளார். இந்த பழக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு அலி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கியுள்ளார். பின்னர் அவரை காதலிப்பதாக சொல்லி பல முறை உடலுறவும் வைத்துக்கொண்டுள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் பயந்து போன பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக சொல்லியுள்ளனர். இதைக்கெட்ட அவரின் பெற்றோர் அதிர்ச்சியாகி சிறுமியிடம் விசாரிக்க அஸ்கர் அலி பற்றி தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் பெற்றோர் போலிஸ் புகார் அளிக்க அஸ்கர் அலி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News