×

பெண் போல பேசி மாணவியின் அரை நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய இளைஞர்!

பெண் போல பேசி மாணவியின் அரை நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய இளைஞர் போலிசாரால் போஸ்கோ சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளார்.
 

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 16 வயது பெண்ணிடம் நட்பாக பேவி பின்பு காதல் வார்த்தைகளை பகிர்ந்துள்ளார். இதனை பிடிக்காத பெண் குறித்த வாலிபரிடமிருந்து பேசுவதை தவிர்த்திருக்கிறார்.

கவுசல்யா என்ற பெண்ணின் பெயரில் வேறு ஒரு போலியான முகவரி ஒன்றை இன்ஸ்டாகிராமில் தொடங்கியுள்ளார். அதன்மூலம் சிறுமியிடம் பெண் குரலில் வாலிபர் பேசத்தொடங்கியுள்ளார்.

சிறுமியும் அது அந்த வாலிபர்தான் என தெரியாமல் பெண் என்பதால் இன்ஸ்டாகிராமில் தினமும் பேசியுள்ளார். ஒரு நாள் சிறுமி குளித்துக் கொண்டிருருந்தபடியே அரை நிர்வாணமாக இன்ஸ்டாகிராம் வீடியோ கால் மூலம் வாலிபரிடம் பேசியுள்ளார். அதனை அந்த வாலிபர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த வாலிபர் தனது செல்போனில் இருந்து பேசி அந்த வீடியாவை வாட்ஸ்ஆப்பில் சிறுமிக்கு அனுப்பியுள்ளார். தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவேண்டும். அப்படி இல்லையென்றால் உனது குளியல் வீடியோவை வாட்ஸ்அப் பேஸ்புக்கில் வெளியிட்டு உன் மானத்தை வாங்கி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி இந்தச் சம்பவம் தொடர்பாக தனது தாயிடம் அழுதபடி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் சென்னை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்திய போது அவர் சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த மகேஷ் (24) என்பதும் பட்டதாரி வாலிபரான அவர் வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் இது போன்ற சிறுமிகளை மயக்கி செக்ஸ் இன்பம் அனுபவிக்க துடித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார் வாலிபர் மகேஷ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News