×

தெலுங்கானாவை புரட்டி போட்ட ஆணவக் கொலை... தந்தை தற்கொலை.. கடைசியாக எழுதிய கடிதம்!

யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாத தெலுங்கானா ஆணவ கொலைக்கு மூளையாக செயல்பட்ட மாருதி ராவ் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 
 

இவர் கடைசியாக எழுதிய கடிதம் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.  தெலுங்கானாவை சேர்ந்த பிரணாய் குமாரும், அம்ருதவர்ஷினியும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள். அதன்பின் கல்லூரியும் ஒரே கல்லூரியில் சேர்ந்து உள்ளனர்.

கல்லூரிக்கு வந்த பின் தான் அவர்கள் காதலிக்க தொடங்கி உள்ளனர். இதை வீட்டில் சொன்ன போது இரண்டு வீட்டிலும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறி அம்ருதவர்ஷினியும் பிரணாய் குமாரும் திருமணம் செய்துள்ளனர்.

இதனை ஏற்க முடியாத பெண்ணின் தந்தை மருமகனை கூலியாட்களை வைத்து கொலை செய்தார். தற்போது இவரும் ஹோட்டலில் ரூம் எடுத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

மாருதி ராவ் எழுதிய தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், `அம்மா அம்ருதா, தாயிடம் சென்றுவிடு’ என எழுதியிருந்ததாகக் காவலர்கள் கூறினார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News