Connect with us

latest news

ஒருவழியா சொல்லிட்டாங்கப்பா… டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 குறித்து வெங்கடேஷ் பட் சொன்ன சர்ப்ரைஸ்!

TopCookuDubeCooku: தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியில் ஒன்றாக வைரல் ஆனது டாப் குக்கு டூப் குக்கு. இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது.

சமையல் நிகழ்ச்சியில் காமெடியை சேர்த்து ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நான்கு சீசன்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று மன அழுத்தத்தினையே சரி செய்யும் என ஓவர் பில்டப் தந்தனர்.

ஆனால் அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்த சீசனே நிகழ்ச்சியின் தயாரிப்பு குழு வெளியேறியது. அவர்களுடன் வெங்கடேஷ் பட்டும் வெளியேறினார். நான் விஜய் டிவியில் எண்ட்ரி கொடுத்த போதே அவர்களுடன் தான் பணி புரிந்தேன் என வெங்கடேஷ் பட் விளக்கம் கொடுத்திருந்தார்.

அடுத்த சில காலத்திலே சன் டிவியில் மீடியா மேசன் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. குக் வித் கோமாளி போல இல்லை என்றாலும் வித்தியாசமான செட் மற்றும் செஃப்களை இறக்கி ஆச்சரியப்படுத்தினர்.

முதல் சீசன் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. ஆனால், முதல் சீசன் நடந்த நேரத்தில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனும் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆறாவது சீசன் குக் வித் கோமாளி தொடங்கப்பட்ட நிலையில் டாப் குக்கு டூப் குக்கு இரண்டாவது சீசன் எப்போது எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

தற்போது டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 முதல் அறிவிப்பு ஆகஸ்ட் 17ந் தேதி அறிவிக்கப்படும் என வெங்கடேஷ் பட் தெரிவித்து இருக்கிறார். இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதற்கான போட்டியாளர் மற்றும் டூப் குக் பிரபலம் தேர்வு பணியும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Continue Reading

More in latest news

To Top