Categories: Cinema News latest news television

பிக்பாஸ் சீசன் 8லிருந்து விலகும் கமல்! அவரே வெளியிட்ட அறிக்கை… என்ன காரணம் தெரியுமா?

விஜய் டிவியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. 7 சீசன்களாக மக்கள் மத்தியில் மிகவும் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இப்போது எட்டாவது சீசனை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கமல் வந்த பிறகு இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள். கமல் தொகுத்து வழங்கும் விதம் போட்டியாளர்களை அவர் கையாளும் விதம் என அனைத்துமே மக்கள் அதிகமாக விரும்பினார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்குள் தவறு செய்யும் போட்டியாளர்களை கமல் கேள்வி கேட்கும் விதத்தை காண சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தொலைக்காட்சி முன்பு ரசிகர்கள் அனைவரும் உட்கார்ந்து விடுவார்கள். அந்த அளவுக்கு கமலுக்காகவே இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் கமல் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கப் போவதில்லை என அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த ஏழு சீசன்களாக தனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்றும் இந்த ஒரு வாய்ப்பை கொடுத்த விஜய் டிவிக்கும் எனது நன்றி என தெரிவித்திருக்கிறார். அவருடைய சினிமாவில் இருக்கும் மற்ற கமிட்மெண்ட்ஸ்களால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர முடியாத சூழ்நிலையில் இருக்கிறாராம் கமல்.

அதனாலையே இந்த சீசனை தன்னால் தொகுத்து வழங்க முடியாது என தெரிவித்திருக்கிறார். மேலும் போட்டியாளர்கள் அனைவரும் தனக்கு கொடுத்த ஒத்துழைப்புக்கும் மக்கள் தனக்கு கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி என்றும் இனிவரும் சீசன்கள் வெற்றியடைய வேண்டும் என்றும் கமல் அந்த அறிவிப்பில் கூறி இருக்கிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்