Categories: latest news television

Bakkiyalakshmi: ஆரம்பிச்ச இடத்துலயே முடிக்க போறாங்க… பாக்கியாவுக்கு கல்யாணமா?

Bakkiyalakshmi: விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொலைக்காட்சி தொடராக இருந்த பாக்கியலட்சுமியின் கிளைமேக்ஸ் நெருங்கி கொண்டு இருக்கும் நிலையில் அதன் புரோமோ வெளியாகி இருக்கிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட சீரியல் பாக்கியலட்சுமி. குடும்ப பெண்ணாக இருக்கும் பாக்கியாவின் போராட்டமே கதை எனக் கூறப்பட்டது. பெரிய அளவில் வில்லி என யாரும் இல்லை.

யதார்த்தமான குடும்ப கதையாக இருந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் பாக்கியாவின் கணவராக வந்த கோபி நடிப்புக்கே ஒரு தனி ரசிகர்கள் இருந்தனர். அவர்களுக்காகவே கோபி தனி டிராக் பெரிதாக அமைக்கப்பட்டது.

ஆனால் ஒரு கட்டத்தில் அதுவே கதையின் முக்கிய திருப்பமாக வைத்தனர். கோபி மற்றும் பாக்கியா விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். அவர் இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் பாக்கியா வீட்டுக்கு வருவதும், போவதுமாக ஒரு கதைக்களத்தை வைத்து கடுப்பேற்றினர். ஒரு கட்டத்தில் ராதிகா டைவர்ஸ் வாங்க சரி சீரியல் முடிய போகிறதாக ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் திடீரென இனியாவிற்கு திருமணம் செய்து வைத்து அதில் ஒரு வில்லனை இறக்க அய்யோ இதுக்கு ஒரு எண்ட்டே இல்லையா எனக் கடுப்படுத்தினர். இந்நிலையில் இனியாவின் கணவரை அவர் அப்பாவே கொலை செய்து விட்டதாக கதை முடிக்கப்பட்டு இருக்கிறது.

செல்வியின் மகன் ஆகாஷ் கலெக்டராக மாறி இருக்கும் நிலையில் அவருக்கு இனியாவை பெண் கேட்டு வருகிறார் செல்வி. இருவருக்கும் கல்யாணம் நடக்கிறது. தற்போது பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை பார்த்து கொண்டு சென்றதால் பாக்கியா மற்றும் கோபியை சேர்ந்து வாழ கேட்கிறார் ஈஸ்வரி.

தற்போது இதற்கு பாக்கியா என்ன சொல்ல போகிறார் என்பதை வைத்து இந்த வாரம் சுபம் போடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
ராம் சுதன்