Connect with us

latest news

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்டு… பாக்கியலட்சுமி சீரியலின் பிரபல நடிகைகளின் எண்ட்ரி!

Bakkiyalakshmi: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தக்கட்ட தகவலால் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கின்றனர்.

2020 கொரோனா சமயத்தில் புரோமோ வெளியாகி லாக் டவுன் முடிந்து ஒளிபரப்பான சீரியல் பாக்கியலட்சுமி. ஆரம்பத்தில் வீட்டில் இருக்கும் குடும்ப தலைவியாக இருந்த பாக்கியாவின் வளர்ச்சி காட்டப்பட்டது.

ஒருகட்டத்தில் கணவர் கோபி தன்னுடைய பழைய காதலியுடன் சேர்ந்து கொண்டு இவரை ஏமாற்றி வருகிறார். அந்த விஷயம் இவருக்கு தெரிய வர குடும்பத்தினர் கோபி மன்னித்து ஏத்துக்க சொல்ல பாக்கியாவோ அவரை விவாகரத்து செய்து விடுகிறார்.

காதலி ராதிகாவை கோபி திருமணம் செய்துக்கொள்கிறார். இதை தொடர்ந்து அந்த ஜோடியும் பாக்கியா குடும்பத்தில் வந்து தங்கி செல்வது வழக்கமாக இருந்தது. அப்போதே ரசிகர்கள் அதான் பாக்கியா பெரிய இடத்துக்கு வந்துவிட்டார்கள்.

இன்னும் இந்த ராதிகா கதையையே சொல்வது மொக்கையாக இருக்கு எனக் கடுப்பாகினர். ஒரு கட்டத்தில் பாக்கியலட்சுமி சீரியல் எண்ட் கார்ட் போடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில் ராதிகா விவாகரத்து செய்த காட்சிகளும் ஒளிபரப்பானது.

அப்பாடா முடிக்க போறாங்க என மூச்சு விட இனியாவிற்கு ஒரு பெரிய இடத்தில் கோபி கல்யாணம் செய்து வைத்தார். இந்நிலையில் தற்போது இனியாவின் கணவர் போதை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதில் கோபி உடைந்து விட்டார்.

இந்த நேரத்தில் பாக்கியாவின் அம்மாவும், அண்ணியும் உள்ளே வரும் காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. அண்ணியாக ரெடின் கிங்ஸ்லி மனைவியும், நடிகையுமான சங்கீதா வர இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. முடிப்பாங்கனு பாத்தா இழுத்துக்கிட்டே இருக்காங்க என்ற கமெண்ட்கள் குவிய தொடங்கி இருக்கிறது.

Continue Reading

More in latest news

To Top