Connect with us

latest news

Cook With Comali: செஃப் தாமு வீல்சேரில் வருவது ஏன்? அவார்ட் விழாவில் நடந்த பிரச்னையின் பின்னணி!

Cook With Comali: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய நடுவரான தாமு வீல்சேரில் வருவதற்கான விஷயம் குறித்து பேசி இருக்கிறார்.

சமையல் நிகழ்ச்சிக்கு ஒரு புதிய வடிவம் கொடுத்து வருவது விஜய் டிவியின் டாப் ரியாலிட்டி ஷோவாக இருக்கிறது குக் வித் கோமாளி. முதல் சீசன் தொடங்கும் போது ஒரு மாதிரியாக வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த சீசனில் ஹிட்டடித்தது.

நான்கு சீசன்கள் எந்த வித பிரச்னையும் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் ஐந்தாவது சீசன் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தயாரிப்பு நிறுவனம் வெளியேற அவர்களுடன் முதலில் நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமு வெளியேறுவதாக அறிவித்தனர்.

ஆனால் ஒரு சில நிமிடங்களில் தாமு வீடியோவை வெளியிட்டு குக் வித் கோமாளியில் தொடர்வதாக அறிவித்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஐந்தாவது சீசனிலே நடுவராக தாமு கலந்துக்கொண்டார்.

தற்போது ஆறாவது சீசனிலும் அவர் முக்கிய நடுவராக இருக்கிறார். இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னரே செஃப் தாமுவிற்கு பத்மவிபூஷன் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்த செஃப் தாமு வீல் சேரில் வந்து கொண்டு இருக்கிறார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில், விருது விழாவிற்கு சென்ற போது படியில் இறங்கும் போது கால் பிசகி விட்டதால் சிகிச்சையில் இருக்கிறேன். இப்போது பரவாயில்லை. வெளியில் நடக்க தொடங்கி இருக்கிறேன். ஆனால் செட்டில் நிறைய ஏற்றம் இறக்கம் இருக்கிறது.

அதனால் தான் வீல் சேரில் வந்து கொண்டு இருக்கிறேன். இன்னும் 2 எபிசோட்களில் கூட பழையப்படி நடந்து சமையல் ஸ்டேஷன்களில் இருப்பேன். டான்ஸ் ஆடவும் செய்வேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். பல நாட்களாக இருந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கும் நிலையில் தாமுவினை பாதுகாப்பாக இருங்கள் என்ற கருத்து வெளிவந்துள்ளது.

Continue Reading

More in latest news

To Top