Categories: latest news television

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ஹீரோயின்… ஆனா ட்விஸ்ட்டு!

Cook With Comali: பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் களமிறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பது குக் வித் கோமாளி. ஒரு சமையல் நிகழ்ச்சியினை ரொம்பவே வித்தியாசமாக மாற்றி ஹிட் கொடுத்தனர். ஒரு பிரபலத்துடன் காமெடி பிரபலம் இணைந்து சமைப்பார்கள்.

முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற இரண்டாவது சீசன் மிகப்பெரிய சூப்பர்ஹிட் அடித்தது. மூன்றாவது, நான்காவது சீசன் ரசிகர்களின் மன நிம்மதிக்கு முக்கிய காரணமாக மாறியது. இதை தொடர்ந்து ஐந்தாவது சீசன் பல கலவரங்களுடன் வெளியானது.

ஆனால் நான்கு சீசன் கொடுத்த வரவேற்பை ஐந்தாவது சீசன் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து ஆறாவது சீசன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இதில் பிரபல நடிகை பிரியா ராமன், ராஜு ஜெயமோகன், ராஜு, சுந்தரி அக்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு தற்போது வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரீமேக் செய்து மலையாளத்தில் குக் வித் காமெடி என்ற பெயரில் ஒரு சீசன் 2023ம் ஆண்டு ஒளிபரப்பானது. இதனையடுத்து, கன்னடத்தில் குக்கு வித் கிறுக்கு என்ற பெயரில் ஒரு சீசன் ஒளிபரப்பானது.

பெங்காலியில் குக் வித் கோமாளியினை ரீமேக் கோலி மேல் கோல் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒரு சீசன் ஒளிபரப்பானது. தமிழை தவிர மற்ற எந்த மொழியிலும் குக் வித் கோமாளி ஒரு சீசனை கூட தாண்டவில்லை. பெரிய அளவு ஹிட் இல்லாமல் இழுத்து மூடப்பட்டது.

இந்நிலையில் குக் வித் கோமாளியின் தெலுங்கு பதிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. குக் வித் ஜாதி ரத்னலு என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் தற்போது சிறகடிக்க ஆசை ஹீரோயின் கோமதி பிரியாவும் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் நடுவராக ராதா, ஆசிஷ் வித்யார்த் களமிறங்கி உள்ளனர்.

Published by
ராம் சுதன்