Kuberaa: தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போடும் குபேரா படத்தில் நடித்த முன்னணி பிரபலங்களின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா. ஒரு பெரிய அரசின் திட்டத்தை கைப்பற்ற நினைக்கும் வில்லன் அதற்கு பிச்சைக்காரராக இருக்கும் தனுஷை எப்படி பயன்படுத்துகிறார் என்பது தான் கதை.
முதல் பகுதி சுவாரஸ்யமாக இருந்தாலும் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடுவதால் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவதாக கமெண்ட்கள் வரத்தொடங்கி இருக்கிறது. அதிலும் தமிழில் இப்படத்திற்கு கலவையான வரவேற்பே கிடைக்கிறது.
நாகர்ஜூனா மேடையிலேயே நான் தான் இப்படத்தின் ஹீரோ எனப் பேசியதும் தமிழ் ரசிகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சம்பள விவரம் கசிந்து இருக்கிறது. ஹீரோ தனுஷிற்கு மட்டுமே மிகப்பெரிய சம்பளமாக 30 கோடி வரை கொடுக்கப்பட்டதாம்.
ஆனால் இது அவருக்கு தமிழில் வாங்குவதை விட குறைவு எனக் கூறப்படுகிறது. நாகர்ஜூனாவுக்கோ 14 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் தரப்பட்டுள்ளது. இதில் ராஷ்மிகா தான் பாவம். 1100 கோடி வசூல் செய்த புஷ்பா2 படத்தில் இவருக்கு 10 கோடிக்கும் மேல் சம்பளம் தரப்பட்டதாம்.
அதை தொடர்ந்து சிக்கந்தரில் இன்னும் கூட கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் குபேர படத்தில் 5 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி இருக்கிறாராம். ஏன் இந்த திடீர் குறைப்பு என்பதற்கான காரணம் கூறப்படவில்லை. சேகர் கம்முலாவிற்கு 10 கோடியும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு 3 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
Vijay TVK:…
2025 Movies:…
Vijay: தற்போது…
இந்த வருட…
Dhanush: தனுஷ்…