Connect with us

latest news

மகாநதி சீரியலில் மாற்றப்பட இருக்கும் பிரபலம்… ரசிகர்களுக்கு இயக்குனர் கொடுத்த டிவிஸ்ட்..

Mahanathi: விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியலான மகாநதியில் திடீரென ஒரு முக்கிய பிரபலம் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியின் பிரபல இயக்குனரான பிரவீன் பென்னட் இயக்கத்தில் வெளியாகும் எல்லா சீரியல்களுமே ரசிகர்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கும். சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, பாரதி கண்ணம்மா சீரியலை இயக்கியவர் பிரவீன் பென்னட்.

விஜய் தொலைக்காட்சி ரசிகர்களிடம் ரியாலிட்டி ஷோக்களால் மட்டுமே ஹிட் அடித்தது. பிரவீன் பென்னட் இயக்கத்தில் வெளியான சீரியல் எல்லாமே மிகப்பெரிய சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல் ஒன்றால் மிகப்பெரிய வைரலாகினார்.

இதில் தற்போது பிரவீன் பென்னட் இயக்கத்தில் மகாநதி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் காவேரி என்ற பெண் தன் குடும்பத்துக்காக செய்யும் விஷயங்களும் தன் தங்கையின் ஹாஸ்பிட்டல் செலவுக்காக காண்ட்ராக்ட் கல்யாணம் செய்து கொள்கிறார்.

அதில் பிசினஸ்மேன் விஜயுடன் காதல் மலர தற்போது குடும்பத்துக்கு காண்ட்ராக்ட் விஷயம் தெரிந்து இருவரையும் பிரித்து வைத்துள்ளனர். இதில் காவேரி கர்ப்பமாகி விட தற்போது இருவரும் சேர்வார்களா இல்லை என்ன நடக்கும் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாகி இருக்கிறது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் பிரவீன் பென்னட் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரிப்ளேஸ்மெண்ட், ரிப்ளேஸ்மெண்ட், ரிப்ளேஸ்மெண்ட் என்ன பண்றது. நான் அவாய்ட் பண்ண முடியாது என பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் முக்கிய கேரக்டர் மாற்றப்படலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹீரோ, ஹீரோயினை மாற்றினால் கண்டிப்பாக இது நிகழ்ச்சியை பெரிய அளவில் பாதிக்கும் என பேச்சு எழுந்துள்ளது.

Continue Reading

More in latest news

To Top