Connect with us

latest news

ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் விவகாரத்து… இரண்டாவது மனைவி இந்த பிரபலமா?

Aishwarya Rajesh: பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனும், நடிகர் மணிகண்ட ராஜேஷும் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதில் பிரபலமானவருக்கு காக்கா முட்டை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி கொண்டவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களில் நடித்தார்.

இவரின் வரவேற்பு மூலம் அண்ணன் மணிகண்ட ராஜேஷுக்கும் புகழ் கிடைத்தது. தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடியவருக்கு பெரிய அளவில் படங்கள் கிடைக்காமல் போக தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார். வலிமையான போட்டியாளராகவும் இருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் இவரை பார்க்க மனைவி சோபியா, தங்கை ஐஸ்வர்யா மற்றும் அம்மா ஆகியோர் உள்ளே வந்து இருந்தனர். அதிலும் மனைவி குறித்து பெருமையாக பேசி வந்தார் மணிகண்ட ராஜேஷ். பிக்பாஸ் விட்டு வெளியில் வந்த பின்னர் இருவரும் பொதுவெளியில் ஒன்றாக தோன்றுவது இல்லை.

ஒரு கட்டத்தில் இருவரும் சண்டை போட்டு பிரிந்து விட்டதாகவும் தங்கை ஐஸ்வர்யா சமரசம் பேசி வருவதாக தகவல்கள் வந்தது. பின்னர் இருவரும் தங்கள் சமூக வலைத்தள கணக்கில் இருந்து ஜோடியாக இருந்த புகைப்படங்களை நீக்கினர். இந்நிலையில் மணிகண்ட ராஜேஷ் தனக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்து இருப்பதை அறிவித்து இருக்கிறார்.

அதில் அவருடன் வேறு ஒரு பெண் இருக்க இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மணிகண்ட ராஜேஷ் சோபியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திடீர் விவாகரத்து ரசிகர்களிடம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இரண்டாவது மனைவி மணிகண்ட ராஜேஷின் உறவினர் என்றும் கூறப்படுகிறது. சோபியா மற்றும் மணிகண்டன் மகன் இவர்களுடன் வளர்ந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அட்டக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்த சோபியா தற்போது மீண்டும் நடிப்பில் களமிறங்கி இருப்பதால் மகனை கணவனிடம் ஒப்படைத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Continue Reading

More in latest news

To Top