Connect with us

latest news

மணிமேகலை புரிஞ்சிக்காம பேசுறாங்க… ஒருவழியா சர்ச்சைக்கு பதில் சொன்ன விஜே பிரியங்கா!

VJ Priyanka: பிரபல தொகுப்பாளரான விஜே பிரியங்கா ஒருவழியாக தன் மீது தொடுக்கப்பட்ட சர்ச்சை குறித்து மறைமுகமாக பதில் சொல்லி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருப்பவர்கள் எப்போதுமே பிரபலமாக வலம் வருவார்கள். அப்படி ஒவ்வொரு நேரத்திலும் ஒருவர் மிகவும் சூப்பர்ஹிட்டாக இருப்பது வழக்கம்தான். அந்த லெவலில் இருப்பவர்தான் விஜே பிரியங்கா.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிக்கு அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசன் குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை எடுத்து பிரியங்கா பேசுவது ரசிகர்களுக்கே அதிருப்தியானது.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை வெளியேறினார். ஆனால் அவர் சும்மா போகாமல் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பிரபல தொகுப்பாளனி என் வேலையில் தலையீடுவதாக குற்றச்சாட்டினை முன் வைத்தார்.

அது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விஜே பிரியங்கா தரப்பிற்குதான் எல்லா பிரபலங்களும் ஆதரவு கொடுத்து வந்தனர். ரசிகர்கள் எல்லாருமே மணிமேகலைக்கு தான் ஆதரவு தந்தனர். இருந்தும் மணிமேகலை குற்றச்சாட்டுக்கு பிரியங்கா பதில் சொல்லாமல் இருந்தார்.

விஜய் தொலைக்காட்சி தரப்புக்கூட விஜே பிரியங்காவுக்கு ஆதரவு கொடுத்து இன்னும் அவருக்கு நிகழ்ச்சி வாய்ப்பு கொடுத்து வருகிறது. மணிமேகலை விஜய் டிவியை விட்டு ஜீ தமிழ் நிகழ்ச்சிக்கு தாவிவிட்டார். இந்நிலையில் பிரியங்கா ஒரு நிகழ்ச்சியில் பெண்களே பெண்கள் சப்போர்ட் செய்ய மாட்டீங்கறாங்களே? அது பற்றி என்ன நினைப்பதாக ரசிகர் விஜே பிரியங்காவிடம் கேள்வி எழுப்பினார்.

இதுக்கு பதில் சொன்ன அவர், அப்படி எல்லாம் இல்லை. சில பெண்கள் மட்டும் தான் அப்படி இருக்கிறார்கள். தாங்கள் நினைப்பது தான் சரியென நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள். மற்றப்படி எல்லா பெண்களும் ஒன்றாக தான் சப்போர்ட் செய்வதாக மணிமேகலையை சாடி பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

Continue Reading

More in latest news

To Top