Connect with us

latest news

Pandian Stores2: செந்திலுக்காக பாண்டியன் செய்த சம்பவம்… கடுப்பான கோமதி…

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

பழனி மற்றும் சரவணனை திட்டிவிட்டு பாண்டியன் கடையில் இருந்து வெளியில் வேலை இருப்பதாக சொல்லி கிளம்பிவிடுகிறார். செந்தில் மற்றும் கதிர் இருவரும் பாண்டியனை பார்க்க கடைக்கு வருகின்றனர். பழனி என்னடா வேலைக்கு போறேனு மாறி கடைக்கு வந்துட்டீயா எனக் கலாய்க்கிறார்.

கதிர் அண்ணனுக்கு அப்பாக்கிட்ட சொல்லிட்டு போகணுமாம் அதான் வந்திருக்கு என்கிறார். அவர் உன்னை பத்திதான் பேசிட்டு இருந்தாரு. வேலை இருந்ததால் வர முடியலை. இப்ப எங்க போய் இருக்காரு என செந்தில் கேட்க வணிகர் சங்கத்தில் வேலை இருப்பதாக போய் இருப்பதாக சரவணன் கூறுகிறார்.

ஆனால் பாண்டியன் மாலை வாங்கிக்கொண்டு வந்து சாமிக்கு செந்தில் பெயரில் பூஜை செய்கிறார். அவர் ராசி, நட்சத்திரத்தினை சொல்லி பூஜை செய்துவிட்டு செல்ல அதே கோயிலுக்கு வருகிறார் கோமதி. அவரும் வந்து செந்தில் பெயரில் அர்ச்சனை செய்ய பூசாரி என்ன வரிசையா வரீங்க என்கிறார்.

யார் வராங்க என கோமதி பார்க்க பாண்டியனை காட்டுகிறார். அங்கு பாண்டியன் இருக்க அசந்து விடுகிறார். மகனுக்காக அர்ச்சனை செய்ய வந்தீங்கனா? வீட்டில் அவன் வேலைக்கு கிளம்பும் போது இருந்து இருக்க வேண்டியது தானே என்கிறார்.

ஏன் இப்போ அது ரொம்ப முக்கியமா என்கிறார். ஆமா இல்லனா அவங்க மேல பாசம் இல்லனு நினைக்க போறாங்க. பாண்டியன், நினைச்சா நினைக்கட்டும். நான் அப்பாவா என் கடமையை செய்றேன் என்கிறார். பின்னர் இருவரும் கோயிலை விட்டு கிளம்ப பைக்கில் செல்கின்றனர்.

கோமதி பாண்டியனிடம் புலம்பி கொண்டே வருகிறார். அவர் முதலில் கடுப்படித்தாலும் உன் மேல எனக்கும் பாசம் இருக்கு எனக் கூறி அவரை சமாளித்து விடுகிறார். கதிர் மற்றும் செந்தில் சென்று கொண்டு இருக்க வணிகர் சங்கம் போகலாம் என்கிறார்.

ஆனால் கதிர் இதுக்கு மேல போனா கண்டிப்பா வேலையில் சேர லேட் ஆகிடும் என்கிறார். வழியில் அரசியை பார்க்க அவர் செந்திலுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். செந்திலை அழைத்துக்கொண்டு அலுவலகத்தில் வந்து விடுகிறார் கதிர்.

மீனா மற்றும் அவர் அப்பா காத்திருக்க செந்தில் வந்துவிட வேலையில் சேர சொல்கிறார். அவரும் உள்ளே சென்று வேலைக்கு சேர வேண்டிய முதற்கட்ட விஷயங்களை முடித்து விட்டு வருகிறார். மீனா மற்றும் செந்தில் சந்தோஷமாக இருக்க எல்லாரும் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

Continue Reading

More in latest news

To Top