Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோடு குறித்த வார ப்ரொமோ வெளியாகியிருக்கிறது.
அரசி திருமணத்திற்கு பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிரச்சனையில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட தங்கமயில் திடீரென கர்ப்பமான காரணத்தால் அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் அரசி கல்யாணம் நடக்காததால் அவருக்காக கார் வாங்க வைத்திருந்த 10 லட்சத்தை பேங்கில் போட சொல்கிறார் பாண்டியன். ஆனால் அரசு வேலை வாங்க வேண்டும் என முடிவிலிருந்து செந்தில் அந்த பணத்தை தன்னுடைய மாமனாரிடம் கொடுத்து விடுகிறார்.
இதை கேள்விப்பட்ட மீனா உடனே பணத்தை ஏற்பாடு செய்ய வலியுறுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் செந்தில் இதை மறுத்த நிலையில் திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் மீனா தன்னுடைய அலுவலகத்தில் 10 லட்சம் கடன் வாங்கி தற்போது செந்தில் பிரச்சினையை முடித்திருக்கிறார்.
இந்நிலையில் செந்திலுக்கு அரசு வேலை கிடைக்க பத்து லட்சம் பணம் கொடுத்த விபரம் பாண்டியனுக்கு தெரிய வருகிறது மீனா செய்த உதவியும் தெரிய அவர் இருவரையும் வசைப்பாடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் மீனாவை பாண்டியன் திட்டிக் கொண்டிருக்க அவர் கோபமாகி உண்மையை உடைத்து விடுகிறார்.
கார் வாங்க வைத்திருந்த பணத்தை பேங்கில் போடாமல் நான்தான் திருடினேன். என்னை காப்பாற்ற தான் மீனா வங்கியில் கடன் வாங்கினால் என உண்மையை சொல்லிவிட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். வெளியில போய் பாரு என்ன மாதிரி ஒரு நல்ல அப்பா உனக்கு கிடைக்க அப்பதான் உனக்கு தெரியும் என்கிறார்.
இதில் கோபமான செந்தில் நீங்க நல்ல அப்பா கிடையாது. கடையிலிருந்து தப்பிக்க தான் நான் அரசு வேலை வேண்டும் என விரும்பினேன் என செந்தில் பாண்டியனிடம் சத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார். அவரை கோமதி அறைந்துவிட குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
Rashmika Mandana:…
Ajith Vijay:…
Seeman: இயக்குனர்…
வெற்றிமாறன் இயக்கத்தில்…
Vijay TVK:…