Vijay Promo: விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ்2 மற்றும் அய்யனார் துணை சீரியல்களின் இந்த வார புரோமோ குறித்த தொகுப்புகள்.
பாண்டியன் ஸ்டோரில் அரசிக்கு கல்யாணம் நடந்து அவர் குமாருக்கும் இடையே நடக்கும் விஷயங்கள் காட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அரசிக்கு கார் வாங்க வைத்திருந்த பத்து லட்சத்தினை பேங்கில் போட சொல்லி பாண்டியன் குமாரிடம் கொடுத்திருந்தார்.
ஆனால் இப்போது எந்த செலவும் வராது. அதனால் தன்னுடைய அரசு வேலைக்கு அந்த காசை கொடுத்து விட்டார் செந்தில். இந்த நேரத்தில் சதீஷின் அப்பா, அம்மா வந்து கல்யாணத்துக்கு செலவு செய்த பத்து லட்சத்தினை எடுத்து வைக்க சொல்கின்றனர்.
பாண்டியனும் வீராப்பாக செந்திலிடம் அதை பேங்கில் இருந்து எடுத்து வரக்கூற அவர் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார். கதிரும் அவருக்கு உதவி செய்தாலும் பணம் கிடைக்காமல் வீட்டுக்கு வருகின்றனர். இந்த விஷயத்தில் பாண்டியன் என்ன செய்ய போகிறார்.
அய்யனார் துணை சீரியலில் பல்லவன் தன்னுடைய அம்மா வேறு மற்ற அண்ணன்களின் அம்மா வேறு என்ற உண்மையை தெரிந்து கொள்ள அவர் காணாமல் போகிறார். பல இடங்களில் தேடி அவரை அண்ணன்கள் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வருகின்றனர்.
அவரை கோயிலுக்கு அழைத்து செல்லும் நிலா அவருக்கு அறிவுரை சொல்லி ஆறுதல் சொல்லி மனதை சரி செய்கிறார். ஓவர் பாசிட்டிவிட்டியுடன் ஓளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு தான் தற்போது ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது.
Vijay TVK:…
2025 Movies:…
Vijay: தற்போது…
இந்த வருட…
Dhanush: தனுஷ்…