Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
குடும்பத்தினர் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்க அரசிக்காக செந்தில் சாக்லேட் வாங்கி வந்து கொடுக்கிறார். நீ அப்பாக்கு சப்போர்ட் செய்ற அதனால உனக்கு கிடையாது எனக் கூற பின்னர் அரசி கலாய்த்து கொண்டு இருக்கிறார். அரசி சாக்லேட்டை வாங்கி பின்னர் எல்லாருக்கும் கொடுக்கிறார்.
கோமதி அரசி வேலை எப்படி போச்சு எனக் கேட்க மீனா அய்யோ எனக் கலாய்க்க தப்பான ஆளுக்கிட்ட கேட்டுட்டீங்க என்கிறார். கதிரும் ஆமா நானும் கேட்டு ரத்தம் வராத குறை என்கிறார். அவர்களை அடக்கும் கோமதி, ராஜி கேள்வி கேட்க செந்தில் அப்படி இருக்கும். இப்படி இருக்கும் என தொடர்ந்து கதை சொல்லி கொண்டு இருக்கிறார்.
மளிகை கடை வேலையெல்லாம் ஒரு வேலையா என கோமதி கடுப்பாக பார்க்கிறார். தொடர்ந்து பாண்டியன் கடையை நக்கலாக பேச செந்திலை அடித்துவிட்டு கோமதி அப்பாவை கலாய்க்கிறீயா? அந்த கடை தானா நமக்கு சோறு போட்டுச்சு என்கிறார்.
உன்கிட்ட வேலை எப்படி போச்சுனு தானே கேட்டேன். அப்பா கதையெல்லாம் கேட்டேனா எனக் கடுப்பாகிறார். மீனாவும் உண்மையை சொல்லுங்க. உருட்டு உருட்டுனு உருட்டாதீங்க என்கிறார். செந்திலும் அவங்க பாராடுனாங்க இவங்க சொன்னாங்க என கதையாக அவிழ்த்து விடுகிறார்.
மயில் ரூமில் சரவணனுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். அவர் எதுவும் தனக்கு வாங்கி கொண்டு வருவார் எனக் காத்து இருக்கிறார். ஆனால் சரவணன் எதுவும் வாங்காமல் வர என்ன வாங்கிட்டு வரேனு சொன்னீங்க எனக் கேட்க நிறைய வேலை மறந்துட்டேன் என்கிறார்.
ராஜி மற்றும் கதிர் இருவரும் கோச்சிங் கிளாஸ் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். பின்னர் பாண்டியன் குறித்து கதிர் காமெடியாக சொல்ல ராஜியும் அதை கேட்டுக்கொண்டு இருக்கிறார். பின்னர் பாண்டியன் குறித்து பிரமிப்பாக பேசுகிறார் ராஜி.
ஆம்பள பசங்க அப்பா மாதிரியே இருப்பாங்க. பொம்பள பசங்க அம்மா மாதிரியே இருப்பாங்க என்கிறார் ராஜி. கதிர் ராஜியிடம் அப்போ உனக்கு பொம்பள பிள்ளை பிறந்த அதுவும் அரந்த வாலு போல தானே இருக்கும் எனக் கேட்க ஆமாம் இதுல என்ன சந்தேகம் என்கிறார்.
உடனே கதிர் அப்போ என்னை அந்த குழந்த எப்படி கூப்பிடும் எனக் கேட்க ராஜி அதிர்ச்சியாக அவரை பார்க்கிறார். ராஜி கடுப்பாகி உன்னை தாத்தா இல்ல லூசுக்கெட்ட கதிருனு கூப்பிடும் எனத் திட்டிவிட்டு படுக்கிறார். பின்னர் கதிருக்கே புரியா அவர் தன்னை திட்டிக்கொள்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில்…
Vijay TVK:…
2025 Movies:…
Vijay: தற்போது…
இந்த வருட…