Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
சுகன்யாவை மிரட்டி இனிமேல் இந்த வீட்டில் உன்னால் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்கிறார் பாண்டியன். அவரும் சாரி எனக் கூறி எழுந்து செல்கிறார். பாண்டியன் பின்னர் பழனியை வீட்டில் இருப்பவர்களை அழைத்து வரச் சொல்கிறார்.
அவர்கள் வந்தவுடன் குமரவேல் மீது புகார் கொடுக்க இருப்பதாக சொல்ல மயில் நம்ம வீட்டு பிள்ளையை எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் கூட்டிக்கிட்டு போணும் எனக் கூற தப்பு செஞ்சிட்டு போனாதான் சங்கடம். நம்ம அப்படி இல்லதானே எனக் கூறிவிடுகிறார்.
கதிர் அப்போ அந்த குமரவேலை எதுவும் செய்ய வேண்டாமா எனக் கேட்க அடிச்சிட்டா எல்லாம் சரி ஆகிடுமா என்கிறார். செந்தில் அவன் சொல்றதுல தப்பு இல்லையே எனக் கூற பாண்டியன் அவரை முறைக்க சரவணன் அதான் அப்பா சொல்லிட்டாருல அமைதிய இருங்கடா என்கிறார்.
ஊர் பேசும் உலகம் பேசும் நினைச்சா பேசிட்டே இருக்கும். அதுவும் பொம்பள பிள்ளையை பெத்தவங்க மத்தவங்களுக்கு பயந்துக்கிட்டே இருக்க முடியுமா என்கிறார். பின்னர் பாண்டியன் முடிவாகி சொல்லிவிட்டு செல்ல செந்தில் மற்றும் கதிர் வெளியில் நின்று கொண்டு இருக்கின்றனர்.
அப்போ மீனா மற்றும் ராஜி வர என்ன இங்க நிக்கிறீங்க எனக் கேட்க அரசி விஷயம் தான் என்கிறார். நீங்க அவ கல்யாண விஷயத்தில ஆதரவு கொடுத்தது தப்பு எனக் கூற அவ தான் சத்தியம் கேட்டதாக மீனா சொல்கிறார். அங்க சத்தியம் பண்ணிட்டு இங்க வந்து எங்களிடம் சொல்லி இருக்க வேண்டும் என்கிறார்.
அப்போ குமார் வர அவரை பார்த்து கதிர் கோபப்பட திமிராக அவரும் நிற்கிறார். இதில் கடுப்பாகி செந்தில் மற்றும் கதிர் சண்டைக்கு செல்ல ராஜி மற்றும் மீனா பிடித்து தடுக்கின்றனர். பாண்டியன் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல அரசி மற்றும் கதிரை அழைத்து செல்கிறார்.
அங்கு இருக்கும் சூழ்நிலை சரியாக இல்லாமல் இருந்தாலும் இன்ஸ்பெக்டர் வந்தவுடன் அரசிக்கு குமரவேல் செய்த எல்லா விஷயத்தை சொல்ல அதிர்ச்சியாகின்றனர். நாங்க என்ன செய்யணுமோ செய்றோம் எனக் கூற படிக்கிற பொண்ணு லைஃப் எனக் கூற அவங்க விஷயமே வெளியில் வராம பாத்துக்கிறேன் என்கிறார்.
முறையாக போலீஸ் கம்ப்ளையண்ட் கொடுத்து விட உடனே போலீஸார் கிளம்பி சக்திவேல் வீட்டுக்கு வந்து குமரவேலை அரெஸ்ட் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆனால் அப்போதும் குமரவேல் திமிராக இருக்க சக்திவேல் அரசி தான் தங்களை ஏமாற்றி விட்டதாக சொல்கிறார்.
ஆனால் போலீஸார் கொடுக்கப்பட்டுள்ள புகாரால் குமரவேலை கைது செய்ய வேண்டும் எனக் கூறி அரெஸ்ட் செய்து அழைத்து செல்கின்றனர். எல்லாரும் பதறி துடித்து பின்னால் செல்ல குமாரை இழுத்து செல்கிறார் இன்ஸ்பெக்டர்.
Pradeep Ranganathan:…
Hariskalyan: இந்த…
STR49: முன்னணி…
Biggboss: விஜய்…
விஜயை உருவாக்கிய…