Pandian Stores2: பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
வீட்டிற்கு வரும் பாண்டியன் கோமதியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் செந்திலை அழைத்து அரசிக்கு கார் வாங்க எடுத்த பணத்தை மீண்டும் வங்கியில் போட்டுவிட அவரிடம் கொடுத்து விடுகிறார்.
ஆனால் செந்தில் இந்த பணத்தை தன்னுடைய வேலைக்காக பயன்படுத்தலாமா என யோசிக்கிறார். இதை மீனாவிடம் வந்து உங்க அப்பா சொன்ன வேலைக்காக இந்த பணத்தை கொடுக்கலாம் என இருக்கிறேன் எனக் கூற அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறார்.
சக்திவேல் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் போது அவர் வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் உள்ளே வருகின்றனர். அவர்களிடம் குமரவேல் ஓவராக பேசிக் கொண்டிருக்க அவரை அடக்கி தாங்கள் சோதனை செய்ய வேண்டும் என்கின்றனர்.
பின்னர், டேபிளில் இருக்கும் காசை பார்த்து கேட்க இது நிலம் வாங்க வைத்திருப்பதாக சொல்கிறார். தொடர்ந்து, அதிகாரிகள் அந்த பணத்துக்கும் கணக்கு கேட்டு கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். பின்னர் அவர்கள் போனை வாங்கிவிட்டு வீடு முழுவதும் சோதனை செய்கின்றனர்.
நிறைய பணம், டாக்குமெண்ட்களை எடுத்து வந்து இதற்கெல்லாம் நீங்க கண்க்கு சொல்லணும் என்கின்றனர். தொடர்ந்து முத்துவேலிடம் இதை சொல்லலாம் என நினைக்க அவரே கால் செய்து உடனே மில்லுக்கு வரச் சொல்லுகிறார்.
என்னவென கேட்க அங்கும் சோதனை நடப்பதை சொல்கிறார். பின்னர் சக்திவேல் மற்றும் குமரவேல் அடித்து பிடித்து ஓட இதை பக்கத்தில் வீட்டில் மீனா சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்.
Vijay TVK:…
2025 Movies:…
Vijay: தற்போது…
இந்த வருட…
Dhanush: தனுஷ்…