1. Home
  2. Latest News

Pandian Stores2: அரசி விஷயத்தில் செய்ததை செந்திலுக்கு செய்வாரா மீனா? என்ன நடக்கும்?


Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

தங்கமயிலை உனக்கு இன்னும் இரண்டு நாள். அதுக்குள்ள உன் புருஷன் வந்தாலும் சரி இல்ல நீயே போனாலும் சரி. உடனே உங்க வீட்டுக்கு கிளம்பு என்கிறார்.

நகை விஷயம் தெரிஞ்சா அவருக்கு எப்படி ரியாக்ட் செய்வாரு எனக் கேட்க அதில் எல்லாமே பொய் இல்லை. 8 பவுன் உண்மைதான் என்கிறார். மேலும் கல்யாணத்துக்கு நிறைய செலவு செஞ்சு கல்யாணம் செஞ்சி கொடுத்து இருக்கேன் என்கிறார்.

மயில் சரவணனை பார்க்க ஆபிஸ் செல்ல அவர் அங்கு இல்லாமல் இருக்கிறார். நண்பர் கால் செய்து சரவணனுக்கு கொடுக்கிறார். அவர் எதுக்காக சொல்லாம கொள்ளாம என் ஆபிஸுக்கு போற எனத் திட்டிவிட்டு போனை வைக்கிறார்.

அரசியின் வீட்டில் பெரிய தொகையை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துட்டு போனாங்க. எல்லாமே இந்த வீட்டுக்கு புதுசா வந்த மகளோட திரதிஷ்டம் தான் என்கிறார். இதை கேட்டு அப்பத்தா கடுப்பாகி திட்ட குமாரை என்ன நீ அமைதியா இருக்க எனக் கேட்கிறார்.

அப்பா சொல்றதும் சரிதானே என குமாரும் பேச கடுப்பாகி விடுகின்றனர் ராஜி அம்மா, குமார் அம்மா. பின்னர் திட்டிவிட்டு அவர்கள் உள்ளே சென்று விடுகின்றனர். ரூமுக்கு வரும் அரசி ஏசியை போட்டு படுக்க செல்ல உங்க வீட்டுல ஃபேனே இல்ல. உனக்கு ஏசியா என நக்கலடிக்கிறார்.

உங்களுக்கு மொத்தமாவே எல்லா காசும் போச்சு. இனிமே பேன் வாங்கவாச்சும் காசு இருக்குமா என நக்கலடிக்கிறார். அரசியின் பேச்சை கேட்டு அப்போ நீ தான் வருமான வரித்துறைக்கு கால் செஞ்சியா எனக் கேட்கிறார். நான் இப்போ செய்யலை. எனக்கு இங்க காசு இருக்கதே தெரியாது.

அப்படி தெரிஞ்சா நானே கால் செஞ்சு கம்ப்ளைண்ட் பண்ணி இருப்பேன் என்கிறார். குமார் மற்றும் சக்திவேல் இது யார் செஞ்சிருப்பார்கள் என்பது குறித்தும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

மீனாவை பார்க்க வரும் செந்தில் நான் ஒரு விஷயத்தை சொல்லணும் என்கிறார். அப்பா கொடுத்த 10 லட்சம் பணத்தை பேங்கில் போடலை எனக் கூற மீனா அப்போ அந்த காசை தொலைச்சிட்டீங்களா என்கிறார். இல்ல என செந்தில் கூற அதை உங்க அப்பாவிடம் கொடுத்திருக்கேன் என்கிறார்.

இதை கேட்கும் மீனா எதுக்கு லஞ்சம் கொடுத்து வேலை வாங்க போறீங்களா? இது வேண்டாம் எனக் கூறினேன். அந்த காசை வாங்கிட்டு வந்து மாமாவிடம் கொடுங்க எனக் கூற அவர் இன்னேரம் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து இருப்பார் என்கிறார் செந்தில்.

அப்போ மாமாவிடம் இந்த விஷயத்தை சொல்லுங்க என்கிறார். அதெல்லாம் என்னால முடியாது எனக் கூறுகிறார். மீனா அப்போ நான் சொல்றேன் எனக் கூற போ போய் சொல்லு எங்க அப்பாக்கு என் மேல அக்கறையே இல்லை. அதனால் இப்படி அசால்ட்டா இருக்காரு எனவும் பேசுகிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.