latest news
Pandian Stores2: ராஜியின் திட்டத்தால் பாண்டியனிடம் டோஸ் வாங்கிய கதிர்… மீனாவின் அடுத்த அதிரடி!
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மயில் மற்றும் கோமதி பேசிக் கொண்டிருக்க அப்பொழுது அங்கு வருகிறார் கதிர். அவர் ராஜி எங்கே என கேட்க கோமதி அவரை கலாய்த்துக் கொண்டிருக்கும் போது சரியாக ராஜி அங்கு வந்து விடுகிறார். அவரையும் கோமதி கலாய்த்து விடுகிறார்.
பின்னர் ராஜியை ஓர் இடத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி கதிர் அழைத்து செல்கிறார். அப்பொழுது கோமதி எலியும் பூனையுமா இருந்தவங்க இப்ப ஒன்னா போறாங்க பாக்குறதுக்கே சந்தோஷமா இருக்கு என்கிறார். இதை கேட்கும் மயில் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாவங்க தானே எனக் கேட்டு விடுகிறார்.
உடனே கோமதி பதறி சின்ன வயசுல ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என சமாளித்து விடுகிறார். ராஜி மற்றும் கதிர் இருவரும் ட்ரைனிங் அகாடமிக்கு செல்கின்றனர். அங்கு பணம் கட்டிய ராஜியை போலீஸ் வேலையில் சேர்வதற்காக கதிர் பயிற்சிக்கு சேர்த்து விடுகிறார்.

பாண்டியன் கதிருக்கு கால் செய்கிறார் என்ன விஷயம் என கேட்க உடனே கிளம்பி கடைக்கு வருமாறு சொல்கிறார். சரி என்கிறார் கதிர். மீனா தன்னுடைய அலுவலகத்தில் ஒரு அதிகாரியை அழைத்து சக்திவேல் மற்றும் முத்துவேல் செய்த நில அபகரிப்புகள் குறித்த ஆதாரங்களை கொடுக்கிறார்.
இது எல்லாம் அவர்கள் அரசு சொத்தை அபகரித்து வைத்துள்ள விவரம் இந்த இடத்திற்கு உடனே நோட்டீஸ் அனுப்புங்க என்கிறார். கடைக்கு வரும் கதிர் பாண்டியனிடம் என்ன விஷயம் எனக் கேட்க நீ அந்த பொண்ணு மேல பாசமா இருக்கணு தானே நினைச்சேன். நீ அந்த பிள்ளைய கொடுமைப்படுத்துறீயா என்கிறார்.
ஆனால் கதிர் அப்படி எதுவும் நடக்கவே இல்லை எனக் கூற அப்போ முத்துவேல் என்னை ரோட்டில் நிக்க வச்சு பேசுனார் என்கிறார். உடனே கதிர் அப்படியெல்லாம் இல்லை எனக் கூறிவிட்டு வீட்டிற்கு வந்து ராஜியிடம் யாரிடமாவது பேசுனீயா எனக் கேட்க அவர் அப்பாவிடம் பேசுனேன் என்கிறார்.
என்ன சொன்ன என கதிர் கேட்க நீ தானே அரசியை குமார் கஷ்டப்படுத்துவானோ என பயந்தாய். நான் ரோட்டில் அவனிடம் பேசுனேன். அவன் என்னிடம் திமிராக பேசினான். அதான் அரசி அங்க கஷ்டப்பட்டா இங்க நான் கஷ்டப்பட வாய்ப்பு இருக்கு எனப் பேசினேன். அதை அவர் தவறாக புரிந்து கொண்டார் என்கிறார் ராஜி.