Connect with us

latest news

Pandian Stores2: பாண்டியனை சீண்ட போய் போலீஸில் சிக்கிய குமரவேல்… அரசி கதைய வச்சே அறுக்காதீங்கப்பா!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடகக் இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

அரசிக்கு செமஸ்டரில் ரிசல்ட் வர அவரை கோயிலுக்கு அழைத்து போக சொல்லி குமாரிடம் சொல்கிறார் அப்பத்தா. முதல் முடியாது என கடுப்படிக்கும் குமார் பின்னர் அரசியை கோயிலுக்கு அழைத்து செல்கிறார்.

பைக்கில் ராஜி மற்றும் கதிர் இருவரும் வெளியில் சென்று கொண்டு இருக்கின்றனர். இருவரும் இளநீர் குடித்துக்கொண்டு இருக்க அந்த இடத்தில் காரை நிறுத்துகிறார் குமார். வெளியில் இறங்கு எனக் கூற அரசி எதுக்கு என்கிறார்.

நீ இறங்கு என அவரை இறக்கி ராஜி மற்றும் கதிர் இருக்கும் கடையில் போய் இளநீர் வாங்கி வரச் சொல்கிறார். அரசி முடியாது எனச் சொல்ல அவரை தள்ளி விடுகிறார். இதை தொடர்ந்து, கதிர் நேராக போய் குமாரிடம் சண்டை போடுகிறார்.

இதனை தொடர்ந்து அரசி உள்ளே வந்து அவர் என்னை தள்ளி விடவில்லை. நாங்க விளையாடிக் கொண்டு தான் இருந்தோம். என்னை இளநீர் குடிக்க சொன்னாரு. நான் முடியாது சொன்னேன். அதனால் என்னை போக சொன்ன போது தள்ளி விட்டாரு எனச் சமாளித்து விட்டு செல்கிறார்.

பின்னர் காரில் உட்கார்ந்து கொண்டு இருக்க அரசி எதுக்காக இப்படி செஞ்சீங்க எனக் கேட்க குமார் என்ன சமாளிக்கிறீயா. உன்னை பார்க்குற இடத்தில் பார்த்துக்கிறேன் என்கிறார். பாண்டியன் கடைசியில் வண்டியை நிறுத்தி கடைக்கு போக அரசியை சொல்கிறார்.

ஆனால் அரசி முடியாது எனக் கூற நீ போகலை என்றால் நான் போவேன். உங்க அப்பாவை போய் ஓங்கி ஒன்னு வைப்பேன் என மிரட்ட அரசி நீங்க அவர அடிப்பீங்களா. அவர் உழைச்சு கையை முரட்டத்தனம் மாதிரி வச்சி இருக்காரு. நீ அடி வாங்குனா தாங்க மாட்ட என்கிறார்.

பின்னர் அரசியை மிரட்டி அனுப்ப அவர் கடைக்கு வருகிறார். பாண்டியன் கோபமாக கத்த அரசி மிரண்டு நிற்கிறார். அப்போ அங்கு குமரவேல் வர சீன் போட போகும் முன்னர் அரசி நீங்க சொன்னது சரிதான் இந்த கடையில் நம்ம மூஞ்சையே பார்க்க மாட்றாங்க.

நாம வேற கடையில் போய் கடலை மிட்டாய் வாங்கிக்கலாம் என பாண்டியன் கடையில் இருந்து குமார் அரசியை அழைத்து செல்கிறார். குமரவேல் ஓவரா பண்ற எனக் கூறி அவரை மிரட்ட பார்க்க அரசி அப்போ வரும் போலீசாரிடம் மாட்டி விடுகிறார்.

வா போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம் எனக் கூற குமார் பயந்துக்கொண்டு இருக்கிறார். பின்னர் அரசி நீங்க போங்க சார். மறுபடி இவரு எதுவும் பண்ணா நான் உடனே வந்து புகார் தருகிறேன் என்கிறார். அவரும் 100க்கு கால் பண்ணும்மா எனச் சொல்லி விட்டு செல்கிறார்.

Continue Reading

More in latest news

To Top