Pandian stores2: பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடித்து வந்த நடிகை தற்போது திருமண மோசடி புகாரில் சிக்கி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரும்பாலும் பிரபலங்கள் தங்கள் சினிமா வாழ்க்கையை விட சொந்த வாழ்க்கையை சரியாக வச்சி இருக்க வேண்டும். இல்லையென்றால் பொது வெளியில் ரசிகர்களிடம் பெரிய அளவில் அடி வாங்க வேண்டி இருக்கும்.
அந்த வகையில் அப்படி ஒரு பிரச்னையில் சிக்கினால் ரசிகர்கள் விமர்சித்தே காலி செய்து விடுவார்கள். இதை சில பிரபலங்கள் தெளிவாக யோசித்து தங்கள் சொந்த வாழ்க்கையை வெளியில் தெரியாமல் வைத்துக் கொள்வார்கள்.
ஆனால் சில பிரபலங்கள் இதை யோசிக்காமல் திடீரென பொதுவெளியில் சிக்கி மொத்தமாக பெயரை கெடுத்து கொள்வார்கள். அப்படி ஒரு பிரபலமாக மாறி இருக்கிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ்2வில் நடித்திருந்த ரிஹானா பேகம். இவர் குமரவேலின் அம்மாவாக நடித்திருந்தார்.
அடிக்கடி பரபரப்பாக பேட்டி கொடுப்பதில் ரிஹானா எப்பையுமே முக்கிய லிஸ்ட்டில் இருந்தவர். இந்நிலையில் அவர் மீது தற்போது திருமண மோசடி புகார் வந்து இருக்கிறது. முதல் கணவர் ஹாபிபுல்லா இருக்கும் போதே விவாகரத்து வாங்காமல் ராஜ்கண்ணன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார்.
அவரிடம் கல்யாணத்துக்கு முன்னர் 9 லட்சமும், ஜிபே மூலம் 9.5 லட்சமும் வாங்கி இருக்கிறார். ராஜ்கண்ணன் திருமணத்துக்கு பின்னர் தன்னுடைய வீட்டுக்கு வரக் கூறி இருக்கிறார். ஆனால் தான் சின்னத்திரை நடிகை பிறருடன் நெருக்கமாக பழக வேண்டி இருக்கும்.
அப்போது எதுவும் கண்டுக்கொள்ள கூடாது எனப் பேசி திமிர் காட்டி இருக்கிறார். இதை தொடர்ந்தே அவருக்கு முதல் திருமணத்தில் விவகாரத்து கிடைக்கவில்லை என்றும், பணத்திற்காக தன்னை ஏமாற்றியதாகவும் ராஜ்கண்ணன் தெரிந்து இருக்கிறார்.
இதையடுத்து, ராஜ்கண்ணன் ரிஹானா பேகம், அவர் தாய் மும்தாஜ், முதல் கணவர் மீது புகார் கொடுத்து இருக்கிறார். இன்று மாலையில் இவர்களை விசாரணைக்கு காவல்துறை அதிகாரிகள் நேரில் வரக்கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Vijay TVK:…
2025 Movies:…
Vijay: தற்போது…
இந்த வருட…
Dhanush: தனுஷ்…