Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் வார புரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2 கடந்த சில வாரங்களாகவே டிஆர்பியில் நல்ல முன்னேற்றம் பெற்று வருகிறது. அந்த வகையில் அரசி கல்யாணத்துக்கு பின்னர் டிஆர்பி எக்கசக்கமாக உயர்ந்து டாப் 10க்குள் இருக்க தொடங்கி வருகிறது.
இந்நிலையில் மீனாவின் கடன் பிரச்னை, செந்தில் அரசு வேலைக்கு கொடுத்த விஷயம், கதிர் படிப்பு, ராஜியின் போலீஸ் கனவு, தங்கமயிலின் அடுத்த பொய் என பல கதைக்களம் இன்னும் ரேஸில் இருக்கிறது.
ஆனால் இதை எல்லாம் விட்டுட்டு மீண்டும் அரசி கதையை ஓட்டிக்கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் சாப்பாடு பரிமாறும் அரசியை கடுப்பேற்ற தட்டை தள்ளி டேபிளில் சாப்பாட்டை கொட்ட விடுகிறார் குமார்.
இதை தொடர்ந்து அரசியை உனக்கு வீட்டில் எதுவும் நல்லதே சொல்லி தரலையா எனத் திட்டிக்கொண்டு இருக்கிறார். இதில் கடுப்பாகும் அரசி தங்கள் ரூமில் குமாரை அடித்து அவர் கழுத்தை நெறித்து வெளியில் தள்ளி விடுகிறார். அந்த நேரத்தில் சக்திவேல் இதை பார்த்து விடுகிறார்.
இந்த ஒரே கதையை வைத்து டிஆர்பியில் முன்னேறவில்லை என்றாலும் நல்ல வரவேற்பு வருகிறது என அரசி குமார் கதையிலேயே இயக்குனர் ரோடு போட்டு கொண்டு இருப்பது கடுப்பை ஏற்படுத்தி வருகிறது. இருக்கும் முக்கிய கேரக்டர்களை மட்டம் தட்டும் விதமாகவே கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
Vijay TVK:…
2025 Movies:…
Vijay: தற்போது…
இந்த வருட…
Dhanush: தனுஷ்…