Connect with us

latest news

அம்மா, அப்பா இறந்துவிட தோள் கொடுத்த அண்ணன்… சீரியல் நடிகையை மணமுடிக்கும் விஜய் டிவி பிரபலம்..

Serial stars: சின்னத்திரையில் தற்போது ஒன்றாக பணிபுரியும் நட்சத்திரங்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கமாக மாறி இருக்கிறது. அந்த வகையில் பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் விஜய் டிவி ஹீரோ.

சின்னத்திரையில் பிரபல வெப் சீரிஸாக ஒளிபரப்பாகி வருகிறது கனா காணும் காலங்கள். இந்த தொடரில் கலை கேரக்டரில் நடித்தவர் அரவிந்த். இவர் அதே சீரியலில் மலர் டீச்சராக நடித்த சங்கீதாவை காதலித்து வந்தார்.

இந்த வருட தொடக்கத்தில் இவர்கள் தங்களின் காதலை அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளம் வெளியிட்டனர். இதை தொடர்ந்து இருவருக்குமே ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்லி வந்தனர். கடந்த கனா காணும் காலங்கள் சீரியலின் பாதி சீசனிலேயே சங்கீதா வெளியேறி இருந்தார். இந்த சீசனுக்கும் அவர் வரவில்லை.

தற்போது இந்த காதலால் தான் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. காதலை சொல்லியாச்சு கல்யாணம் எப்போ எனக் கேள்விகள் எழுந்துவந்த நிலையில் சங்கீதா மற்றும் அரவிந்தின் திருமணம் பிப்ரவரி இரண்டாம் தேதி நடக்க இருக்கிறதாம்.

கொரோனா காலக்கட்டத்தில் அரவிந்தின் அப்பா மற்றும் அம்மா இறந்துவிட்டனர். இதனால் தற்போது அரவிந்தின் திருமணத்தினை அவர் அண்ணன் தான் முன்னின்று நடத்த இருக்கிறாராம். இரு தரப்பு சம்மதப்படி கோலாகலமாக நடத்த முடிவெடுத்துள்ளனர்.

யூட்யூப்பில் நடித்து வந்த அரவிந்த் கனா காணும் காலங்களுக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனா துணை சீரியலில் ஹீரோவாகி இருக்கிறார். விரைவில் தம்பதிகளாக போகும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Continue Reading

More in latest news

To Top