Connect with us

latest news

Serial TRP: சன் டிவிக்கு கடும் போட்டி கொடுக்கும் விஜய் டிவி… ஆனா இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலையே!

Serial TRP: தமிழ் டெலிவிஷன் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துவரும் வாராந்திர டிஆர்பி தற்போது வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டின் 22வது வார பட்டியலுக்கான ஜூன் 6 முதல் 12 வரை ஒளிபரப்பான சீரியல்கள் பெற்ற டிஆர்பி பட்டியலின் தொகுப்பு.

இந்த வாரமும் பட்டியலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. எப்போதும் போல சன் டிவியின் முக்கிய தொடர்களான சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு மற்றும் கயல் தொடர்கள் தான் முதல் மூன்று இடத்தினை பிடித்து இருக்கிறது. இந்த மூன்று சீரியல் மட்டுமே பல மாதங்களாக டாப் 3ல் இருக்கிறது.

நான்காவது இடத்தில் சன் டிவியின் மருமகள் சீரியல் இருக்கிறது. எப்போதும் போல இந்த சீரியலின் கதையிலும் பெரிய மாற்றமில்லை. இருந்தும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி கொண்டு இருப்பதால் இந்த சீரியலுக்கு டாப் 4வது இடம் கிடைத்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் சறுக்கலை சந்தித்த இந்த சீரியல் தற்போது ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இருந்தும் இதன் கதையின் ரூட்டை மாற்றி வருவதால் பெரிய அளவில் முன்னேறாது என்றே கூறப்படுகிறது.

ஆறாவது இடத்தில் அய்யனார் துணை சீரியலும், ஏழாவது இடத்தில் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலும் இடம்பிடித்து இருக்கிறது. கடந்த வாரம் டாப் 10ல் இருந்த சீரியல் மீண்டும் ரசிகர்களின் ஆதரவுடன் முன்னேறி இருக்கிறது.

எட்டாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடர் இடம்பிடித்துள்ளது. கடந்த வாரத்தில் இந்த சீரியல் தான் விஜய் டிவியின் டாப் இடத்தில் இருந்தது. ஆனால் மீண்டும் சறுக்கி இருக்கும் இந்த சீரியல் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளது.

தற்போது ஒன்பதாவது இடத்தில் சன் டிவியின் அன்னம் சீரியல் இடம் பிடித்து உள்ளது. பத்தாவது இடத்தில் விஜய் டிவியின் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் இருக்கிறது. கடந்த வாரம் டாப் 10க்குள் இருந்த மகாநதி இந்த முறை சறுக்கி டாப்10ல் இருந்து வெளியேறி விட்டது.

இந்த வாரத்திலும் சன் டிவியின் ஆதிக்கம் தெளிவாக தெரிகிறது. ஆனால் விஜய் டிவியின் சில தொடர்கள் முன்னேறி வருகின்றன. டிஆர்பி தரவரிசை வாரந்தோறும் மாறக்கூடியது என்பதால், வருகிற வாரங்களில் இந்த பட்டியலில் மாற்றங்கள் வரலாம்.

Continue Reading

More in latest news

To Top