Connect with us

latest news

வேலுநாச்சியாரை அவமானப்படுத்துறீங்க!.. ஸ்ருதி நாராயணன் பங்கேற்ற விழாவில் வெடித்த சர்ச்சை!..

சின்னத்திரை நடிகை ஸ்ருதி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கி பத்திரையாளர்களிடமிருந்து ஒடிய ஸ்ருதி நாரயணன் தற்போது கடுக்கா படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

ஸ்ருதி நாராயணன் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து தனது சின்னத்திரை பயணத்தைத் தொடங்கினார். பின்னர் மாரி, சிறகடிக்க ஆசை என தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், சிறகடிக்க ஆசை சீரியல் தமிழகத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. சின்னத்திரையுடன், சமந்தா நடித்த “சிட்டாடல்: ஹனி பன்னி” என்ற வெப் சீரிஸிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் ரங்கராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் கட்ஸ் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று, இயக்குநருக்கு நன்றி தெரிவித்து உருக்கமாகப் பேசியிருந்தார்.

ஸ்ருதி நாராயணனின் பெயரில் ஒரு அந்தரங்க வீடியோ இணையத்தில் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ ஒரு ஆடிஷன் என்ற பெயரில் எடுக்கப்பட்டதாகவும், அதில் ஒரு இயக்குநருடன் வீடியோ அழைப்பில் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில், வீடியோவைப் பகிர்ந்தவர்கள் மீது கேள்வி எழுப்பாமல், தன்னை மட்டும் குறைகூறுவதாக ஸ்ருதி கோபமடைந்து நானும் ஒரு பெண், எனக்கும் உணர்வுகள் உள்ளன” என்று கூறி, இது தனக்கும் தனது குடும்பத்திற்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பதிவிட்டிருந்தார்.

இயக்குநர் எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் உருவாகி வரும் கடுக்கா படத்தின் போஸ்டர் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். வீரமங்கை வேலுநாச்சியார் போஸ்டரை ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய இவரை எல்லாம் வைத்து வெளியிடுவது வேலுநாச்சியாரை அசிங்கப்படுத்துவது போல இல்லையா என்கிற பத்திரிகையாளரின் கேள்விக்கு தயாரிப்பாளரும் படத்தின் ஹீரோவுமான விஜய் கெளரிஷ் ஸ்ருதி நாராயணனுக்காக சப்போர்ட் செய்து பேசி அந்த பஞ்சாயத்தை சமாளித்தார்.

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top