Categories: latest news television

Singapenne: என் வாழ்க்கையை அழிச்சவனை நான் பார்க்கணும்.. ஆனந்தியின் கோபம்… பரபர புரோமோ

Singapenne: சன் டிவியில் பரபர சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டுக்கான புரோமோ குறித்த அப்டேட்.

ஆனந்தியின் கர்ப்பத்தால் அவர் தன்னுடைய காதலர் அன்புவை ஒதுக்கி விடுகிறார். இதனால் ஆனந்தியின் தோழிகள் கர்ப்பத்தை கலைத்தால் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் என ஆனந்திக்கே தெரியாமல் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர்.

ஆனால் அந்த விஷயத்தை தெரிந்துக்கொள்ளும் வார்டன் வந்து இந்த விஷயத்தினை தடுத்து ஆனந்தியிடமும் சொல்லி விடுகிறார். தன் தோழிகளிடம் இதை கலைத்தால் நான் அன்புவுடன் வாழ்ந்து விட முடியுமா? என்னால் முடியாது என சத்தம் போடுகிறார்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக போகும் எபிசோட்டில் ஆனந்தி வார்டனிடம் என்னுடைய வாழ்க்கையே அழிஞ்சிட்டு. அதை செஞ்ச அந்த அயோக்கியனை நான் ஒரு முறை பார்த்தே ஆக வேண்டும் என்கிறார். இதை கேட்கும் தோழிகள் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதை தொடர்ந்து ஆனந்தி தன் தோழிகளுடன் ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்பிவிட வழியில் பார்க்கும் மகேஷ் எங்க போனீங்க. சவுந்தர்யா நீயாச்சும் சொல்லு எனக் கேட்க வார்டன் தான் சொல்வதாக அங்கு வருகிறார்.

மகேஷ் அன்பு அம்மாவிடம் அன்பு ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி இருந்தப்ப ஆனந்தி தவிச்ச தவிப்பும் அழுகையும் பக்கத்தில் இருந்து பார்த்த எனக்கு தான் தெரியும் என்கிறார். அப்ப ஏன் பார்க்க வரல என அவர் கேட்க துளசி அத்தை நான் உங்களிடம் ஒன்னு சொல்லணும் என சில விஷயங்களை சொல்கிறார்.

டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியலின் இந்த பரபரப்பால் தொடர்ந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இதை உடைக்கும் போது அந்த பரபரப்பை பூர்த்தி செய்யுமா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
ராம் சுதன்