சிங்கப்பெண்ணே சீரியல் வழக்கம்போல நாளுக்கு நாள் விறுவிறுப்பு அடைந்து வருகிறது. மகேஷை மித்ரா காதலிக்கிறாள். துளசி அன்புவைக் காதலித்தாள். அவனோ ஆனந்தியை உயிருக்கு உயிராகக் காதலிப்பது தெரிந்ததும் அவளே வேண்டாம் என்று ஒதுங்கி தன் மாமாவான அன்புவின் காதலைச் சேர்த்து வைப்பதே தனது நோக்கம் என்று மாறி விட்டாள்.
அதே நேரம் ஆனந்தியோ தன் கர்ப்பம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறாள். ஆனால் வார்டன் மற்றும் அவளது தோழிகளுக்கு இந்த விஷயம் தெரிந்து விடுகிறது.
அவர்களும் ஆனந்தியைக் காக்க பலவாறு போராடுகிறார்கள். இப்போது கோகிலாவின் கல்யாணம் நடக்க உள்ளது. அதே நேரம் ஆனந்தியின் கழுத்தில் துளசியின் ஆலோசனைப்படி அன்பு தாலி கட்டத் தயாராக இருக்கிறான்.
புரொமோவில் தாலி கட்டுவது போலவும், அழகப்பன், ஆனந்தியின் அம்மா, அன்புவின் அம்மா என அனைவரும் அதிர்ச்சியில் பார்ப்பது போன்றும் காட்டப்படுகிறது. அப்படியே திருமணம் ஆனால் அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா? கோகிலாவின் திருமணம் நடந்ததா? ஆனந்தியின் திடீர் கல்யாணத்தால் கோகிலாவுக்கு பாதிப்பு வருமா? ஆனந்தியின் கர்ப்பம் அன்புவுக்குத் தெரிந்து விடுமா? சுயம்புவுக்கு தெரிந்த இந்த விஷயத்தைக் கல்யாண வீட்டுக்கு வந்து அவன் எல்லாரிடமும் அம்பலப்படுத்தி விடுவானா? என கதை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
ஆனந்தி ஏன் இப்படி முட்டாள்தனமான வேலைகளைச் செய்து வருகிறாள்? அவள் அன்புவிடம் தன் கர்ப்பம் குறித்த விஷயத்தைச் சொன்னால் அவன் அதற்குக் காரணம் யார் என கண்டுபிடிப்பான். அது மகேஷ் என அவனுக்குத் தெரிந்துவிட்டால் அவனே மகேஷூக்குத் திருமணம் செய்து வைப்பான்.
அதே போல ஆனந்தியின் பரிதாபத்தைத் தவறாக எண்ணாமல் தானே கூட மனமுவந்து ஏற்றுக் கொண்டு மணமுடிக்கவும் வாய்ப்பு உள்ளது. அன்புவின் குணம் தெரிந்தும் ஆனந்தி இந்த விஷயத்தில் கோட்டை விடுவது ஏன் என்று தான் தெரியவில்லை. அதே போல மித்ராவோ மகேஷை எப்படியாவது கல்யாணம் செய்து விட வேண்டும் என்றும் அதற்கு ஆனந்தி எந்தவிதத்திலும் தடையாக வந்துவிடக்கூடாது என்றும் பரபரப்பாக செயல்படுகிறாள்.
அன்புவின் அம்மாவோ ஆனந்தியை அன்பு எப்படியாது திருமணம் செய்ய வேண்டும். அதற்காக ஆனந்தியின் அம்மாவிடம் பேசி விட வேண்டும் என துடிக்கிறாள். கதை போகிற போக்கு சரியில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோகிலாவின் கல்யாணத்தையே ஜவ்வாக இழுப்பது போல தெரிகிறது. கிட்டத்தட்ட இதுவே 7 எபிசோடுகளைக் கடந்து விட்டது. நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…