latest news
Singappenne: ஆனந்தி கோகிலாவின் கல்யாணத்தை வெற்றிகரமாக நடத்துவாளா? சுயம்புவின் திட்டம் என்ன?
சிங்கப்பெண்ணே: ஆனந்தி ஆடமறுக்கிறாள். அக்கா கோகிலாவும் அவளது சொந்தக்காரர்களும் அவள் ஆட வற்புறுத்துகின்றனர். அதன்பிறகு ஆனந்தியும் ஆட்டம் போடுகிறாள்.
ஆனந்தி அண்ணன் வேலு கல்யாணத்திற்கு வர முடியாததால் அனைவரும் நல்லாருக்க வேண்டும் என நினைக்கிறான். அந்த டிரஸை தான் வாங்கி வந்ததாக ஆனந்தி சொல்லி அப்பா அம்மாவிடம் சமாளிக்கிறாள். அவர்களும் டிரஸ் நல்லாருக்குன்னு சொல்கிறார்கள். ஆனால் கோகிலாவிடம் மட்டும் உண்மையைச் சொல்கிறாள் ஆனந்தி.
அந்தநேரம் பார்த்து சுயம்பு வருகிறான். ஊர்கட்டு முறை ரூ.10 ஆயிரம் கொண்டு வந்திருப்பதாக சொல்கிறான். ஆனால் ஆனந்தியின் அப்பா அழகேசன் அதை வாங்க மறுக்கிறார். அது மட்டும் அல்லாமல் சொந்தக்காரர் என்பதால் அதிகமாக 15 ஆயிரம் வைத்து 25 ஆயிரம் வைத்திருப்பதாவும் வாங்கச் சொல்லியும் வற்புறுத்துகிறான் சுயம்பு.
ஆனால் கடவுள் எங்களுக்கு வேண்டியதைத் தந்திருக்கான். அதனால் இது தேவையில்லை என அழகேசன் சொல்லி விட சுயம்பு கடுப்பாகிறான். கடைசியாக ஆனந்தி அப்பாவை ஊர்;க்கட்டு தானே அப்பா வாங்கிக்கோ என்கிறாள்.
நம்மால அடுத்தவங்களுக்கும் நாளைக்கு பாதிப்பு வந்துடக்கூடாதுன்னு சொல்கிறாள் ஆனந்தி. அதனால் அழகேசனும் அதற்கு சம்மதித்து வாங்குகிறார். அதேநேரம் ஆனந்தி ஊர்க்கட்டு 10 ஆயிரத்தை மட்டும் வாங்கச் சொல்கிறாள். இதனால் சுயம்புக்கு அவமானமாகப் பட்டாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

சுயம்பு இந்த பணம் எப்படியும் ஆனந்திக்குத் தான் போய்ச் சேரப்போகுதுன்னு சொல்கிறான். இது மட்டும் அல்ல. வேறு எதுவேணாலும் கேளுன்னு சொல்கிறான் சுயம்பு. அதே நேரம் சுயம்பு கூட இருக்குற சேகர் அவனை உசுப்பேத்துகிறான். இனியும் இந்தக் கல்யாணம் நடக்கணுமான்னு கேட்கிறான்.
ஆனந்தி என் பணத்தை வாங்க சம்மதித்த போதே அவள் என் பக்கம் வந்துட்டான்னு தான் அர்த்தம் என்கிறான் சுயம்பு. சாமி கிட்ட கொண்டு போய் இந்த பணத்தை வாங்கி வையிக்கான்னு ஆனந்தி அக்கா கோகிலாவிடம் சொல்கிறாள். அந்த நேரம் அழகேசன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி நிற்கிறார்.