Categories: latest news television

singappenne: சுயம்புவால் கோகிலாவின் கல்யாணத்துல சிக்கல்… ஆனந்தி என்ன செய்வாள்?

சிங்கப்பெண்ணே தொடர் சன் டிவியில் வழக்கம்போல விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. ஒருபுறம் சுயம்பு, இன்னொரு புறம் சேகர், இன்னொரு புறம் லலிதா என பிரச்சனைகள் சூழ கோகிலாவின் கல்யாணம் சிக்கல் இல்லாமல் நடக்குமா என்று கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில் அன்புவின் அம்மா லலிதாவுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அன்புவுக்குப் போன் போட்டு நிலைமை என்னன்னு விசாரிக்கிறாள்.

ஆனந்தியைக் கட்டிக்க அவங்க அப்பா, அம்மாவிடம் பேசியாச்சான்னு கேட்க அன்பு ஏதேதோ சொல்ல அது பிடிக்காமல் அவளே நேரில் வர கிளம்புகிறாள். உடன் துளசியும் நானும் உங்களோடு வருகிறேன் என கிளம்புகிறாள். விடிந்தால் கல்யாணம். இப்போது நலங்கு என கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது.

மயிலு பாட்டியிடம் சேகர் கொடுத்த மயக்கமருந்தை பாலில் கலந்து கோகிலாவிடம் கொடுக்க வருகிறாள் பாட்டி. கோகிலாவோ நான் விரதம். எதுவும் சாப்பிடக்கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்கன்னு சொல்கிறாள். பாட்டி அப்படி ரொம்பவும் விரதம் இருந்தா மயக்கம் வந்துடும். அதனால பாலைக் குடின்னு கட்டாயப்படுத்துகிறாள். அதே நேரம் ஆனந்தி அங்கு வந்து விடுகிறாள்.

உடனே ஆனந்தி மயிலு பாட்டியை அனுப்பி விட்டு கோகிலாவை பால் குடிக்க வைக்கிறாள். மயிலு எவ்வளவோ சொல்லியும் குடிக்காத கோகிலா ஆனந்தி சொன்னதும் தட்டாமல் குடிக்கிறாள். நலங்குக்கு பொண்ணை அழைத்து வருகிறாள் ஆனந்தி. மாப்பிள்ளையை அன்பு அழைத்து வருகிறான்.

ஆனந்தியிடம் அன்பு தனியாக அழைத்து அம்மா வரும் விவரத்தைச் சொல்கிறான். அதே நேரம் ஆனந்தி பதற்றப்பட்டு ஆஸ்டல் வார்டனுக்கு போன் பண்ணி வரச் சொல்கிறாள். அன்புவின் அம்மாவை சமாளிக்க நீங்க தான் சரியான ஆள். அதனால உடனே கிளம்பி வாங்கன்னு சொல்கிறாள். இதற்கிடையில் ‘நலங்கு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா’ன்னு கேட்குறாங்க. ‘எப்படி ஆரம்பிப்பீக’ன்னு சொல்கிறான் சுயம்பு. அனைவரும் அவனையே பதற்றத்துடன் பார்க்கின்றனர். அடுத்து என்ன நடக்குது என்பதை நாளைய எபிசோடில் காணலாம்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v