Connect with us

latest news

ஒருவழியா என் கனவு நிறைவேறிடுச்சு!.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த சிறகடிக்க ஆசை விஜயா..

தமிழ் சினிமாவில் சீரியலில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அணிலா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி என்ற சீரியலின் மூலமாக அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பாவம் கணேசன் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் கொடுமைக்கார மாமியாராக நடித்து அசத்தி வருகின்றார். இந்த சீரியலை பார்க்கும் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். இருப்பினும் தன்னுடைய நடிப்பிற்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது என்று அவர் சமீபத்திய பேட்டியில் கூட கூறியிருந்தார். சீரியல்களில் அம்மாவாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவர் ஒரு சிறந்த டான்ஸர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி சீசன் 10 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தனது திறமையை காட்டி இருந்தார். தமிழ் சினிமாவில் சீரியல்களில் நடித்து வந்தாலும் இவர் கேரளாவை சேர்ந்தவர். கேரளாவில் இருந்து தமிழில் நடிக்க வந்த போது பலரும் அவரை தாழ்த்தி பேசி இருக்கிறார்கள். உன்னை தமிழில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உன்னால் அங்கு நிலைத்து நிற்க முடியாது என்றெல்லாம் கேலி செய்திருக்கிறார்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மனதில் அம்மாவாகவும், வில்லி மாமியாராகவும் இடம் பிடித்திருக்கின்றார். அணிலா என்னதான் தமிழ் சீரியலில் அறிமுகமானாலும் இவர் தனது சொந்த மாநிலமான மலையாளத்தில் எந்த சீரியலிலும் படங்களிலும் நடிக்கவில்லை. இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘மலையாளத்தில் பவித்திரம் என்கின்ற சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. என்னுடைய பல நாள் கனவு தற்போது நிறைவேறி இருக்கின்றது’ என்று பகிர்ந்து இருக்கின்றார்.

தற்போது வரை இரண்டு சீரியல்களில் நடித்து வரும் அணிலா மூன்றாவதாக ஒரு சீரியலிலும் கமிட்டாகி இருக்கின்றார். இதனால் அவர் ஏதாவது ஒரு சீரியலில் இருந்து விலகுவாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இருப்பினும் மலையாளத்தில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு அவரின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading

More in latest news

To Top