1. Home
  2. Latest News

Siragadikka Aasai: முத்து சொன்னதை நிரூபித்த அருண்… இதெல்லாம் ரொம்ப தப்புதான்!


Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.

மனோஜ் வாயில் சூடத்தை போட்டதும் அவர் அலறிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடுகிறார். இதனால் கடுப்பான விஜயா எதற்காக இப்போ அவன் வாயில் சூடத்தை போட்டீங்க என கேட்கிறார். உடனே அந்த சாமியார் இது போனாதான் அவரோட கெட்ட காலம் சரியாகும் என்கிறார்.

பின்னர் மனோஜை பேச கூற அவர் திக்கி திக்கி கொண்டிருக்கிறார். உடனே முத்து அவன் பேசணும் அவ்வளவுதானே எனக் கூறி முதுகில் ஓங்கி ஒரு அடி அடிக்க மனோஜ் பின்னர் நன்றாக பேசிவிடுகிறார். தொடர்ந்து விஜயா மனோஜிடம் நீ பேச முடியாமல் இருந்தபோது ரோகிணி உனக்காக சொன்னதெல்லாம் உண்மையா என்கிறார்.

இதனால் ரோகிணி அதிர்ச்சியில் மனோஜை பார்க்க மனோஜ் நான் சொன்னதை தான் ரோகிணி சொன்னதாக சொல்லிவிடுகிறார். பின்னர் மனோஜ் ரூமில் எதக்காக நான் சொன்னதை சொல்லாமல் நீ உனக்கு தோன்றியதை சொன்ன எனக் கேட்கிறார்.

ரோகிணி வேண்டும் என்றே தான் சொன்னேன். உன்னையும், என்னையும் பிரிக்க கூடாதுனு தான் சொன்னேன். கடவுளே நினைச்சாலும் நம்மை பிரிக்க முடியாது என்கிறார். மனோஜ் இதுக்கு நீ பொய் சொல்லாமயே இருக்கலாமே என்கிறார்.

அது நடந்து முடிஞ்சிட்டு பழசை மறந்துடலாம். நான் அப்படியே உன்னை லவ் செய்வதாக சொல்கிறார். ரோகிணி மனோஜை தொட பார்க்க அவர் விலகி தள்ளி போகிறார். நம்ம சேர்வதை அம்மா தான் முடிவு செய்யணும் என மனோஜ் சொல்ல ரோகிணி கோபமாகி விடுகிறார்.

முத்து காருக்கு வெளியில் நிற்க அந்த பக்கமாக அருண் செல்கிறார். இந்த சமயத்தில் ஒரு செயின் பறிப்பு சம்பவம் நடக்க அருண் வண்டியை திருப்பி கொண்டு வருவதற்குள் முத்து அந்த திருடனை விரட்டி பிடித்து அடிக்கிறார். இதில் அந்த திருடனின் கூட்டாளி ஓடி விடுகிறார்.

கிடைத்த கேப்பில் முத்துவிடம் தப்பிய திருடன் ஒரு வீட்டில் நுழைந்து அந்த பெண்ணை கத்தி வைத்து மிரட்ட அருண் தயங்கி கொண்டு இருக்கிறார். ஆனால் முத்து சாதூர்யமாக செயல்பட்டு அந்த திருடனை திசை திருப்பி அடித்து மடக்கி விடுகிறார்.

பின்னர் அருணும், முத்துவும் அடித்து அந்த திருடனை பிடித்து விடுகின்றனர். ரோகிணி மகேஷ் என பேசி திரும்பவும் மனோஜை தன் பக்கம் திருப்ப முயற்சி செய்கிறார். இதை மனோஜ் ஒட்டுக்கேட்டு விட்டு யார் கூட பேசுற எனக் கேட்க வித்யாவை பார்க்க போவதாக மாற்றி பேசுகிறார். இதனால் மனோஜ் கடுப்பாகிறார்.

அருணுக்கு புரோமோஷன் கிடைக்க இருப்பதாக தன் அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். எதுக்காக இது எனக் கேட்க ஒரு திருட்டு கேஸை பிடித்தாக சொல்ல முத்து உதவி செஞ்ச விஷயத்தை சொல்லாமல் தவிர்த்து விடுகிறார்.

அருணின் அம்மா விஜயாவிடம் பேசிய விஷயத்தை சொல்ல அருண் கோபமடைகிறார். சீதாவிடமும் பின்னர் பேசும் அருண் தன் புரோமோஷன் விஷயத்தையும் திருட்டு கேஸை பிடித்த விஷயத்தையும் சொல்கிறார். ஆனால் முத்து செய்ததை சொல்லாமல் விடுகிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.