Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியின் நம்பர் 1 தொடரான சிறகடிக்க ஆசையில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மீனா வீட்டுக்கு அவர் அம்மா வந்து சீதாவின் தாலி மாற்றும் பங்ஷனுக்கு அழைக்க வருகிறார். மீனா உனக்கு சீதா வீடு போல மரியாதை இருக்காது அம்மா என்கிறார். ஆனால் அவர் அம்மா அதுக்கு என்ன அவங்களை பத்தி தான் நமக்கு தெரியுமே. நீ கோபப்படாதே என்கிறார்
வீட்டிற்கு வந்து எல்லார் நலமும் விசாரித்துவிட்டு சீதாவுக்கு தாலி பிரிச்சு கோர்க்கும் பங்ஷன் நடத்த இருப்பதாக சொல்கிறார். எங்க வச்சி இருக்கீங்க எனக் கேட்க விஜயா நக்கலாக பேசுகிறார். அண்ணாமலை ஆனால் எனக்கு அன்னைக்கு ஸ்கூலுக்கு போணும். இன்னொரு நாள் வந்து கண்டிப்பாக பார்க்கிறேன் எனக் கூறுகிறார்.
ஆனால் விஜயா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்து ஏன் நான் வந்து நடத்த கூடாதா எனக் கேட்கிறார். இதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். மீனா முதற்கொண்டு ஷாக்காக விஜயா நன்றாக பேசி சமாளித்து விடுகிறார்.
ஒருவேளை பழசை மறந்துட்டாங்களோ என மனோஜ் கேட்கிறார். எல்லாரும் அதிர்ச்சியாக தங்கள் ஜோடிக்குள் பேசிக்கொள்கின்றனர். விஜயா பார்வதியையும் வரச்சொல்லுங்க எனக் கூறிவிட சரி என்கிறார்கள். மீனா சந்தோஷமாக முத்துவிடம் கூற அவர் அதான் எனக்கு சந்தேகமா இருக்கு என்கிறார்.
நீங்க வருவீங்களா எனக் கேட்க முதலில் தயங்கி பின்னர் ஒப்புக்கொள்கிறார். எல்லாரும் கிளம்பி அந்த பங்ஷனுக்கு செல்கின்றனர். முதலில் பார்வதி ஆச்சரியமாக கேட்க தன்னுடைய பிளானை சொல்கிறார். பார்வதி ஆச்சரியமாகி விடுகிறார்.
எல்லாரும் சீதா வீட்டுக்கு வந்து இறங்குகின்றனர். விஜயா அங்கு சென்று மீனாவின் தோழிகளிடம் அழகாக கொஞ்சி பேசுகின்றார். பின்னர் சீதாவுக்கு பங்ஷன் நடக்க சீதாவை உச்சி முகர்ந்து கொஞ்ச எல்லாரும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.
விஜயா எல்லா சடங்கையும் செய்ய அதை பார்வதி வீடியோவாக எடுத்து விடுகிறார். பாசமாக விஜயா பேசுவதை யாருமே நம்பாமல் இருக்கின்றனர். இதை பார்க்கும் மீனா நெகிழ்ந்து விடுகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில்…
Vijay TVK:…
2025 Movies:…
Vijay: தற்போது…
இந்த வருட…