Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
சீதாவின் வீட்டில் நடக்கும் தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் விஜயா ஓவராக அவரைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். பின்னர் மீனாவின் தோழிகளை பார்த்து அவருக்கு ஸ்வீட் ஊட்டி விட அதை பார்வதி வீடியோ எடுத்துக் கொள்கிறார்.
எதற்காக அத்தை இப்படி நடந்துக்கிறாங்கன்னு எனக்கு தெரியல. ஆனா அவங்க செய்யறது நல்லா இருக்கு என மீனா கூறுகிறார். உடனே எனக்கு என்னவோ அம்மா செய்வதில் சந்தேகமா இருக்கு என முத்து கூற, சம்திங் ஃபிஸி என்கிறார் ஸ்ருதி.
பின்னர் பார்வதி இடம் நம் கிளம்பலாம் எனக் கூற அவர் சாப்பிடவில்லையே என கேட்கிறார். இங்கே நல்லா இருக்காது உனக்கு வெளியில் பிரியாணி வாங்கி தரேன் என கூறிவிட்டு பின்னர் எல்லோரிடமும் பாசமாக பேசுவது போல் சொல்லிவிட்டு வெளியில் சென்று விடுகிறார்.
வெளியில் விஜயாவை பார்க்கும் மீனாவின் தோழிகள் மீண்டும் அவரிடம் நன்றாக பேச மூஞ்சியில் அடுத்தது போல பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுகிறார். இதை பார்க்கும் ஸ்ருதி மீண்டும் இவங்க அந்நியனா மாறிட்டாங்க என சொல்லிவிட்டு செல்கிறார்.
பங்க்ஷன் முடிந்த பின்னர் சீதா மற்றும் முத்து இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். முத்து ஜோடி பொருத்தம் நன்றாக தான் இருக்கு எனக் கூற சீதாவும் சிரித்து அவரிடம் பேசிக் கொண்டிருப்பதை தள்ளி இருந்து பார்க்கும் அருண் கோபப்படுகிறார்.
இதை மீனாவும் கவனித்து விட உடனே அருண் சீதாவை ஸ்வீட் தருவதாக கூற அதை வாங்கிக்கொண்டு முத்துவிடம் வருகிறார். மீண்டும் இருவரும் பேசுவதில் கடுப்பான அருண் தன்னுடைய பைல் எடுக்க வேண்டும் எனக் கூறி அவரை ரூமிற்கு அழைப்பு செல்கிறார்.
பின்னர் முத்து மீனாவிடம் நீனும் பல குரலும் இங்கு இருங்க நானும் கிரிஷும் கிளம்புவதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின்னர் ஒரு கடையில் இருவரும் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டு இருக்க அங்கு வரும் பிஏ அதை ரோகிணிக்கு வீடியோ காலாக எடுத்துக்காட்டுகிறார்.
எனக்கு நீ பணம் கொடுக்கவில்லை என்றால் நேரா முத்துவிடம் லைவ் டெலிகாஸ்ட் இதை சொல்லிவிடுவேன் என்கிறார். உடனே ரோகிணி பதற என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்கிறார். சரி எவ்வளவு தான் கொடுப்பாய் என கேட்க முதலில் 50,000 என்கிறார் ரோகிணி.
ஆனால் பி ஏ எனக்கு இரண்டு லட்சம் வேணும் எனக் கேட்கு நாளைக்குள் பணம் வரவேண்டும் என மிரட்டி விட்டு போனை வைக்கிறார். பின்னர் ரோகிணி சேப்டி லாக்கரில் வைத்த பணத்தை எடுக்கலாம் என யோசிக்கிறார். இதனால் அங்கு வேலை செய்பவர்களை காரணம் சொல்லி அனுப்பிவிட்டு கேமராவையும் ஆப் செய்துவிட்டு பணத்தை எடுத்து விடுகிறார்.
காரில் சென்று கொண்டிருக்கும் முத்து விஜயா பெயரில் அன்னதானம் என போட்டு இருக்க அவர் இல்லை என நினைத்துக் கொண்டு நகரும் போது ஒரு தாத்தா வருகிறார் அவரை உள்ளே அழைத்து சென்று சாப்பிட முத்து உட்கார வைக்க அங்கு விஜயா இருக்கிறார்.
விஜயா எல்லோருக்கும் பரிமாறிக்கொண்டு இருக்க உடனே முத்துவும் அங்கு சாப்பிட அமர்ந்து விடுகிறார். வரிசையாக வரும் விஜயா முத்துவை பார்த்து அதிர்ச்சியாக நிற்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில்…
Vijay TVK:…
2025 Movies:…
Vijay: தற்போது…
இந்த வருட…