Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ரோகிணி தன்னுடைய அம்மாவிடம் முத்துவை உடனே கிரிஷை அழைத்து கொண்டு வந்து விடச்சொல்லு என்கிறார். ரோகிணி அம்மா என்னை இன்னும் 10 நாட்கள் இங்க தங்க சொல்லி இருக்கிறார்கள். கிரிஷை என்ன செய்வது எனக் கேட்க அதுக்கு நான் எதுவும் வழி செய்கிறேன் என்கிறார்.
நடுராத்திரி கிரிஷை எழுந்து ரோகிணி ரூமுக்கு வருகிறார். அவரை அழைத்து வந்து பேசும் ரோகிணி யாரிடமும் அம்மா பத்தி சொல்லக்கூடாது. நீ அங்க போய் படுத்துக்கோ எனக் கேட்க உங்களோடயே படுத்துக்கிறேன் அம்மா என்கிறார் கிரிஷ். சரியாக மீனா எழுந்து கிரிஷை தேடுகிறார்.
அவர் வர கதவு மறைவில் நின்றுக்கொண்டு ரோகிணி கிரிஷை போக சொல்லி விடுகிறார். தண்ணி வேணும் என கிரிஷும் சமாளித்து விட அவரை கட்டிலில் உட்கார சொல்லி தண்ணி கொடுத்து என்ன வேண்டும் என்றாலும் என்னிடம் கேள் எனக் கூறிவிடுகிறார்.
அடுத்த நாள் காலை கிரிஷிற்கு சாப்பாடு கொடுத்து கொண்டு இருக்கிறார் முத்து மீனா. கிரிஷை அமர வைத்து அவர் அம்மா தகவலை குடும்பத்தினர் கேட்க ரோகிணி குறித்து மாட்டிவிடாமல் பொய் சொல்லி சமாளிக்கிறார். ஒருகட்டத்தில் கிரிஷின் பள்ளிக்கு லீவ் லெட்டர் எழுதி கொடுக்கிறார் ரோகிணி.
அம்மா பெயரை கல்யாணி எனக் கூற எழுதி முடித்துவிட்டு மனோஜ் அதை வாங்கி படிக்க என்ன ரோகிணி உன் பெயரை எழுதி கையெழுத்து போட்டு இருக்க எனக் கேட்க அவங்க அம்மா எழுதின மாதிரி இருக்கணுமேனு தான் அப்படி எழுதி விட்டதாக சமாளிக்கிறார்.
விஜயா டான்ஸ் கிளாஸில் ரதி திடீரென மயங்கி விழ டாக்டரை அழைத்து சோதிக்கிறார்கள். அவர் இந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக சொல்ல விஜயா ஷாக்காகி விடுகிறார். பின்னர் வெளியில் வந்த விஜயா மயங்கி விழ பார்வதி மற்றவர்களை கிளம்ப சொல்கிறார். ரதி தன்னுடைய காதலனிடம் நான் அப்போவே சொன்னேன். நீதான் கேட்கலை. இப்போ என்ன செய்ய போறேனே தெரியலை எனத் திட்டிவிட்டு செல்கிறார்.
Pradeep Ranganathan:…
Hariskalyan: இந்த…
STR49: முன்னணி…
Biggboss: விஜய்…
விஜயை உருவாக்கிய…