Connect with us

latest news

Siragadikka Aasai: உடைந்த சீதா கல்யாண ரகசியம்… மீனா மீது எகிறும் முத்து.. சோலி முடிஞ்சிது!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் வார புரோமோ குறித்த தொகுப்புகள்.

விஜய் தொலைக்காட்சியின் முதல் சீரியல் என்ற இடத்தை பிடித்திருக்கிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன் மிக முக்கிய வெற்றிக்கு காரணம் ஹீரோவாக நடிக்கும் வெற்றி வசந்தும் ஹீரோயினாக நடிக்கும் கோமதி பிரியாவும் தான்.

பல இடங்களில் இருவரும் தங்கள் கேரக்டரில் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் இருவருக்கும் இருக்கும் பெரிய பலமே ஒற்றுமைதான். ஒருவருக்காக ஒருவர் செய்யும் காரியங்களால் பாராட்டுக்களை பெற்று வந்தனர். அந்த விஷயத்தில் தற்போது கல்லை எறிந்து விட்டார் இயக்குனர்.

மீனாவின் தங்கை சீதா கான்ஸ்டபிள் அருணை காதலித்து வந்தார். இவருக்கும் முத்துவிற்கும் இருக்கும் பிரச்னையால் முதலில் முத்து இந்த திருமணத்துக்கு சம்மதம் சொல்லாமல் இருந்தார். அந்தவேளையில் சீதா எங்க அப்பா இருந்தா இப்படி ஆயிருக்காதே என டயலாக் விட்டார்.

இதை கேட்ட மீனாவும் தடுமாறி பதிவுத்திருமணம் செய்து வைத்தும் விட்டார். இதற்கிடையில் முத்து நடந்த சில விஷயங்களை யோசித்து கல்யாணத்துக்கு சம்மதமும் சொல்லிவிட்டார். இவருகள் திருமணம் பலரின் உதவியோடு பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

இதில் அங்கிருக்கும் சிலர் இது மாப்பிள்ளைக்கு இரண்டாம் திருமணம் எனப் பேச தொடங்க அது மண்டபம் முழுவதும் பரவுகிறது. ஒரு கட்டத்தில் விஷயம் முத்து காதுக்கும் வர அவர் அருணை இழுத்து வந்து சத்தம் போட தொடங்குகிறார்.

ஒருகட்டத்தில் அருண் ஆமா இது இரண்டாம் கல்யாணம்தான். முதல் கல்யாணமும் சீதாவோட நடந்தது என்கிறார். துணைக்கு வந்த கான்ஸ்டபிள் ஆமாம். நான்தான் இவனுக்கு சாட்சி கையெழுத்து போட்டேன். பொண்ணுக்கு அவங்க அக்கா போட்டாங்க என்கிறார்.

இதை கேட்டு முத்து அதிர்ச்சி அடைகிறார். மீனா பேச வர அவரை தடுத்துவிடுவதுடன் வார புரோமோ முடிகிறது. இனிமேல் கண்டிப்பாக மீனாவின் மேல் கோபம் வெடிக்கும் சீதா தன் வாழ்க்கைக்காக அக்காவின் வாழ்க்கையில் வெடி வைத்துவிட்டார். ரசிகர்களும் கவலையில் உள்ளனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top