Siragadikka aasai: இந்த அருண் நல்லவரா? கெட்டவரா? மீண்டும் சரியென நிரூபிக்கும் முத்து…

 
Siragadikka aasai: இந்த அருண் நல்லவரா? கெட்டவரா? மீண்டும் சரியென நிரூபிக்கும் முத்து…

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

அருண் சீதாவுக்கு கால் செய்து தனக்கு புரோமோஷன் கிடைத்த விஷயத்தை கூறி நேரில் வருவதாக சொல்கிறார். இதை வெளியில் வந்து சீதா அவர் அம்மா மற்றும் மீனாவிடம் சொல்ல அவரை இப்போ எதுக்கு வரச்சொன்ன. அதான் செட்டாகாதுனு சொல்லிட்டோமே என்கிறார் மீனாவின் அம்மா.

மாப்பிள்ளைக்கு பிடிக்கலைனா இங்க நடக்காது எனக் கூறிவிட்டு செல்கிறார். சீதா மற்றும் மீனா இருக்க அப்போ வரும் அருண் தன்னுடைய புரோமோஷன் குறித்து சொல்லி உங்க வீட்டுக்காரருக்கு கூட இதுவும் தெரியும். அவரும் அங்க இருந்தார்.

அந்த திருடனை பிடிக்க அவரும் உதவி செய்தார் எனவும் கூறுகிறார். பின்னர் அருணின் அம்மா இந்த கல்யாணம் நடக்காது எனக் கூறியதையும் அவரும் நிறைய முயற்சி செய்து பார்த்து விட்டார். ஆனா உங்க ஹஸ்பண்ட் பழி வாங்குறாரு. அதான் அம்மாவும் இப்படி ஒரு முடிவுக்கு வந்ததாக சொல்கிறார்.

இதை கேட்டு மீனா மற்றும் சீதா அதிர்ச்சியாக இருக்க எனக்கு இப்போ தான் அப்பா இல்லாத கஷ்டமே புரியுது. அவர் இருந்தா எனக்கு பிடிச்ச மாதிரி மாப்பிள்ளையை கட்டி வச்சிருப்பாரு. அவர் இல்லாததால் என் வாழ்க்கையில் என்ன நடக்கும்னு மத்தவங்க முடிவு பண்ண மாதிரி ஆயிடுச்சு என்கிறார்.

மறுபக்கம் அருண் திருடனை தான் மட்டும் பிடித்தாக ஓவராக பேட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார். அதை பார்த்து முத்துவின் நண்பர்கள் ஆஹாஓஹோ எனப் பேச முத்து கடுப்பாகி விடுகிறார். அவன் மட்டுமா பிடிச்சான். நான் தான் சாதுர்யமாக செயல்பட்டு அந்த திருடனை பிடிச்சேன் என்கிறார்.

உடனே முத்து அருணுக்கு கால் செய்து என்ன நீ மட்டும் திருடனை பிடிச்சு மாதிரி பேட்டிலாம் கொடுக்கிற எனக் கடுப்படிக்கிறார். அதான் பேச வேண்டிய இடத்தில பேசிட்டேனே. அதான் போலீஸ் பவர் என திமிராக பேசுகிறார். முத்து கடுப்பாகி விடுகிறார்.

பின்னர், ரோகிணி ஹோட்டலில் ஒரு ஆணுடன் உட்கார்ந்து இருக்க அங்கு மனோஜ் வந்து விடுகிறார். இவன் தான் மகேசா எனக் கேட்க என்ன ஒட்டுக்கேட்டியா என்கிறார் ரோகிணி. பதில் சொல்லு எனக் கேட்க இவர் என் பிரண்டோட ஹஸ்பெண்ட். என் பிரண்ட் மகேஷ். மகேஸ்வரி என்கிறார்.

அவ வந்துட்டு இருக்கா வர வரை தனி டேபிளையா உட்கார முடியும் என்கிறார். பின்னர் மனோஜை தனியாக அழைத்து சென்று உன்னை தவிர எனக்கு வேற யாரும் இல்லை எனக் கூறிக் கொண்டு இருக்கிறார். அம்மாவை சமாதானப்படுத்த முடியாது என்கிறார் மனோஜ். பின்னர் ரோகிணி எனக்கு தாயத்து தந்த சாமியாரை தெரியும். அவர்கிட்ட போகலாம் சொல்லு நான் பாத்துக்கிறேன் என்கிறார் ரோகிணி.

From Around the web