Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தன்னுடைய கதையை விட்டு விட்டு வேறு தேவையே இல்லாத எபிசோட்களால் இழுத்தடித்து ரசிகர்களை கடுப்படித்து வருகிறது.
அம்மா மற்றும் மகனுக்கு இடையே நடந்த பிளாஷ்பேக், ரோகிணியின் தில்லாலங்கடி, மனோஜின் திருட்டுத்தனம் உள்ளிட்டவை தான் சிறகடிக்க ஆசையின் முக்கியமான கதை. ஆரம்பத்தில் இந்த சீரியல் பரபரப்பாக தொடங்கியது.
அதிலும் ஹீரோ வெற்றி வசந்த் தன்னுடைய முத்து கதாபாத்திரத்தால் ரசிகர்களை கவர்ந்து விட்டார். இதற்காகவே சீரியல் சூப்பர்ஹிட்டாகி ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த சீரியலின் எல்லா கேரக்டருமே வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனால் அவர்கள் மட்டும் சரியாக இருந்தால் போதுமா? கதை என்பது சீரியலுக்கு வேண்டாமா? தேவைப்பட்ட கதையை விட்டுட்டு சுவாரஸ்யமற்ற ரூட்டுக்கு திருப்பி விட்டு இருக்கின்றனர். தேவை இல்லாத கதையை கூட கடுப்பேற்று வகையில் அமைத்துள்ளனர்.
அதிலும் இந்த வார வெளியான புரோமோவில் மனோஜை தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள ரோகிணி சாமியாரை வைத்து விஜயாவை ஏமாற்றி வைக்கிறார். அந்த சாமியார் உங்க உயிரை எமன் இழுத்து போக போகிறான் என மிரட்டுகிறார்.
அந்த பயத்தில் அவர் இருக்கும் போது முத்து எமன் போன்று மாறுவேசத்தில் வந்து மிரட்டுகிறார். இதில் விஜயா பயந்துக்கொண்டு இருக்க அப்போ வரும் அண்ணாமலை அசால்ட்டாக டேய் முத்து என்னடா செய்ற எனக் கேட்டு கடுப்படிக்கிறார்.
இதை பார்த்த குடும்பத்தினரும் வாய் திறந்து இவரா என்பது போல பார்க்கின்றனர். இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள் எபிசோட் தான் டல்லடிக்குதுனு பார்த்தா இப்போ உங்க புரோமோ கூட சரியே இல்லையே எனக் கலாய்த்து வருகின்றனர்.
Vijay TVK:…
2025 Movies:…
Vijay: தற்போது…
இந்த வருட…
Dhanush: தனுஷ்…