Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மீனா பதிவு திருமணம் குறித்து அம்மனிடம் சீட்டு போட்டு கேட்க முடிவெடுத்து எழுதிக்கொண்டு இருக்கிறார். அப்போ சீதா வர வேண்டிக்கொண்டு இதில் ஒரு சீட்டை எடுத்துக்கோ என்கிறார். சீதாவும் சீட்டை எடுத்து மீனாவிடம் தருகிறார்.
அதை மீனா பிரித்து பார்க்க பதிவு திருமணம் செய்யலாம் என வந்து இருக்கிறது. சீதா அவரிடம் என்ன அக்கா எனக் கேட்க எனக்கு நீங்க சொன்னதுல என்ன முடிவு எடுக்குறதுனே தெரியலை. அதான் சீட்டு போட்டு பார்த்தேன். இப்போ ஒரு முடிவு கிடைச்சிட்டு என்கிறார்.
அதை கேட்கும் சீதா சந்தோஷப்பட அவரிடம் தேங்க்ஸ் அக்கா என்கிறார். மறுபக்கம் முத்து ஒருவரை காரில் இறக்கி விட அவர் காசை கொடுக்காமல் உள்ளே சென்று விடுகிறார். முத்துவும் பின்னாடியே செல்ல அவரை ஒரு அசிஸ்டெண்ட் மடக்கி உட்கார வைத்து அவர் வந்து தருவார் எனக் கூறிவிடுகிறார்.
அந்த அசிஸ்டெண்ட் ஒருவருக்கு எமதர்மர் வேஷம் போட்டு பேச வேண்டிய வசனங்களை சொல்லி கொடுக்க அந்த நடிகர் தடுமாறுகிறார். உடனே முத்து அந்த வசனங்கள் எல்லாம் ஈசியா இருக்கு பொறுமையா பேசுங்க என்கிறார்.
வாயால சொல்லலாம் என டயலாக் விட பேசவும் செய்யலாம். எனக்கு சொல்லுங்க என முத்து அதை கேட்டு கொண்டு இருக்கிறார். மறுபக்கம் மீனா அருணை சந்தித்து தன்னுடைய சம்மதத்தை சொல்கிறார். ஆனா என் புருஷனுக்கு எதிரா இதை செய்ய நினைக்கலை. அவருக்கு உங்களை பிடிக்கலை. எனக்கே உங்க கேரக்டரை புரிஞ்சிக்க முடியலை. இது எல்லா சீதாவுக்கு தான். அவ உங்களை விரும்பாம நீங்க கட்டிக்க கேட்டு இருந்தா நான் சம்மதிச்சு இருக்கவே மாட்டேன் என்கிறார்.
உங்க வேலைல நீங்க எப்படி வேணா இருங்க. ஆனா சீதாக்கு நல்ல புருஷனா இருக்கணும் எனக் கூற நான் நல்லா பார்த்துக்குவேன் என்கிறார் அருண். கல்யாணத்துக்கு ரெடி பண்ணுங்க. ஆனா இப்பையும் என் கணவரை ஜெயிச்சிட்டதா நினைக்காதீங்க எனக் கூறிவிட்டு செல்கிறார்.
வீட்டில் விஜயா சிகப்பு புடவை கட்டாமல் இருக்க மனோஜ் ரோகிணியிடம் அம்மா இதை நம்பவே இல்லை. அதான் வேற கலரில் புடவை கட்டி இருக்காங்க என்கிறார். ஆனா ஆண்ட்டி இதை பற்றி யோசிப்பாங்க என்கிறார் ரோகிணி. பின்னர் இருவரும் சாப்பிட போகின்றனர்.
விஜயா ரோகிணியை என்ன சாப்பிட உட்காருற. நீயும் மீனாக்கூட பரிமாறு என்கிறார். அப்போ திடீரென சிரிப்பு சத்தம் வர எல்லாரும் திரும்பி பார்க்க எமன் வேடம் போட்ட ஆள் வர விஜயா பயந்து மிரள்கிறார். அவர் விஜயாவை மிரட்டிக்கொண்டு இருக்கிறார்.
விஜயா பதறி என்னங்க எனக் கத்த அவர் வந்து டேய் முத்து என்னடா இது விளையாட்டு எனத் திட்ட எல்லாரும் அவரை அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். விஜயாவும் கோபத்தில் பார்க்கிறார்.
Vijay TVK:…
2025 Movies:…
Vijay: தற்போது…
இந்த வருட…
Dhanush: தனுஷ்…