Categories: latest news television

Siragadikka Aasai: சீதா கதையை வச்சு அறுக்காதீங்கப்பா… முடிச்சி விடுங்க… அடுத்த பிரச்னைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோகிணி!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் இன்றைய எபிசோட் குறித்த தொகுப்புகள்.

மீனா சீதா மனசை தெரிஞ்சிக்காம மாப்பிள்ளை பார்க்காதீங்க என சொன்னதால் அவரை மருத்துவமனையில் சந்திக்கும் முத்து எப்படி உனக்கு மாப்பிள்ளை பார்க்கணும் எனக் கேட்கிறார். ஐடில மாப்பிள்ளை பார்க்கவா இல்ல அரசு வேலைல இருக்கணுமா என்கிறார். அதற்கு சீதா அருணை நினைத்து கொள்கிறார்.

எனக்கு கவர்மெண்ட் வேலைல இருக்க மாப்பிள்ளை தான் வேண்டும் என்கிறார். சரி கூட்டு குடும்பம் வேணுமா இல்ல தனியா பிறந்த பையன் வேண்டுமா எனக் கேட்க அதற்கும் தனி பையன் தான் என்கிறார். சரி உனக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பையனை பார்க்கிறேன் எனக் கூறி செல்கிறார்.

ரோகிணி நேராக ஸ்ருதி வீட்டுக்கு வந்து அவர் அம்மாவை சந்திக்கிறார். ஒரு விஷயம் பேசணும் எனக் கேட்க அவரை தனியாக ரூமிற்கு அழைத்து செல்கிறார். அங்கு ரோகிணி எனக்கு அவசரமாக 2 லட்சம் பணம் வேண்டும் என்கிறார்.

உடனே ஸ்ருதியின் அம்மா ஷாக்காகி ஓ இரும்மா நான் அவங்க அப்பாக்கிட்ட கேட்டு சொல்றேன் என்கிறார். வெளியில் போய் அவரிடம் சொல்ல இதுக்கு தானே அவங்க நம்மளை யூஸ் பண்ணிப்பாங்கனு எனக்கு தெரியுமே. முதலில் அனுப்பிவிடு என்கிறார்.

அவரும் சரி இல்லை எனக் கூறி விடுவதாக சொல்லி செல்ல ஒரு நிமிஷம் யோசிக்கும் ஸ்ருதியின் அப்பா, ரவி மற்றும் ஸ்ருதி இங்க வர ஒரே வழி தான் இருக்கு. அங்க நமக்கு ஒரு ஆள் வேண்டும். இவ நிறைய பொய் சொல்லி இருப்பா போல. வாழ்க்கையை காப்பாத்திக்க என்ன வேண்டாலும் செய்வா என கொடுக்க சொல்கிறார்.

ஸ்ருதியின் அம்மாவும் சரியென ரோகிணியிடம் பணம் கொடுக்க சம்மதம் சொல்கிறார். ஸ்ருதியின் அப்பா உனக்கு அவசரத்துக்கு நாங்க செஞ்ச மாதிரி நீ எங்களுக்கு செய்ய மாட்டியா என்ன எனக் கேட்க கண்டிப்பா செய்வேன் என்கிறார். பின்னர் ஸ்றுதியின் அம்மாவிடம் காசு வாங்குனது யாருக்கு தெரிய வேண்டாம் என்கிறார்.

வீட்டிற்கு வரும் முத்து, மீனாவிடம் சீதா சொன்னதை சொல்ல அவ யாரை நினைச்சு சொல்லி இருக்கானு கூட உங்களுக்கு புரியலையா என்கிறார். யார நினைச்சு அவ சொன்னது அருணை தான் என்கிறார். முத்து இல்லையென எனக் கூற இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது.

உடனே முத்து மற்றும் மீனா, சீதாவை பார்க்க செல்கின்றனர். சீதாவிடம் வரும் முத்து நீ அதை அருணை நினைச்சு சொல்லலை தானே எனக் கேட்க அவரை நினைச்சு தான் சொன்னேன் என்கிறார். இதில் கடுப்பாகும் சீதா அம்மா அவரை அடிக்க போக நடுவில் மீனா நிறுத்தி சமாதானம் செய்கிறார். இதில் கடுப்பாகும் முத்து கிளம்பிவிடுகிறார்.

Published by
ராம் சுதன்