Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.
ரோகிணி ஸ்ருதியிடம் நீங்க கார் விட்ட கத்துக்கலையா எனக் கேட்க அதுக்கு நிறைய கவனிக்கணும். நமக்கு அது சரி வராது என்கிறார். அங்க கார் வாங்குனா ரவி ஒட்டுவான். இல்ல ஆள் வச்சிப்போம் என்கிறார். உடனே விஜயா மீனா இருக்காளே அவளை வச்சிக்கோ என்கிறார்.
அவங்களும் ஒன் ஆஃப் தி பாட்னர். அவங்க கத்துக்கிட்டா நாலு பேருக்கு சொல்லி கொடுப்பாங்க என பதிலடி கொடுக்கிறார் ஸ்ருதி. பின் ரூமுக்குள் சென்ற பிறகு, எவ்வளவு உஷாரா எல்லாத்தையும் செக் பண்றாங்க. நீ அப்படி இல்லை என மனோஜிடம் கூறுகிறார் ரோகிணி.
என்னை அவங்களோட கம்பேர் பண்ணாத நான் எவ்வளவு படிச்சிருக்கேன் தெரியுமா என மனோஜ் பில்டப் கொடுக்க நீ பேசாத ஒரு ஜிஎஸ்டி கூட கட்டாம வச்சிருக்க என்கிறார். சீதா ஸ்கூட்டி ஓட்டி வர ஹெல்மெட் போடாததால் அவரை கான்ஸ்டபிள் நிறுத்துகிறார்.
ஹெல்மெட் போடாமல் வண்டியை ஓட்டியதால் 1000 அபராதாம் போடுகிறார். என்னை தெரியலையா என சீதா கேட்க நான் டியூட்டியில் யாரையும் பாக்க மாட்டேன் என அபராதத்தை அவரே கட்ட போக அதை தடுத்து சீதாவே கொடுத்து விடுகிறார்.
பின்னர் அண்ணாமலை வீட்டுக்கு பரசு அழுதுக்கொண்டே வருகிறார். என்ன விஷயம் எனக் கேட்க அவர் மகள் எழுதி வைத்திருந்த லெட்டரை கொடுக்க அதை முத்து படிக்கிறார். நீங்க இவ்வளவு நாள் என்னை நல்லா பாத்துக்கிட்டீங்க. நான் இனிமே இவர் கூட தான் வாழ போறேன்.
ஒருநாள் நீங்க என்ன ஏத்துப்பீங்க என நம்புவதாக எழுதிவிட்டு அவர் மகள் ஓடிவிட்டதாக அழுகிறார். இப்போ அழுது என்ன பண்ண போய் கூட்டிட்டு வாங்க அப்புறம் பேசிக்கலாம் என்கிறார். மீனா மற்றும் முத்து பவானி வேலை செய்த இடத்தில் தேட போக அங்கிருந்த பெண்ணிடம் விசாரிக்கின்றனர்.
அதுபோல பவானி ஓடி வந்த பையன் வீட்டில் மலேசியா மாமாவின் தங்கை வீடு என்பதால் அவர் இந்த காதல் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். இங்கு முத்து போலீஸ் என மிரட்டு விஷயத்தை வாங்கி விடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…