Connect with us

latest news

ரோகிணியை கழற்றிவிட்ட வித்யா… மீனாவிடம் வசமாக சிக்கும் சம்பவம்… ஆனா?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.

வித்யா என்ன சவுண்டா பேசிட்டே இருக்க. இனிமே உன்னோட எந்த தப்புக்கும் நா துணை போக மாட்டேன் எனக் கூறிவிடுகிறார். ரோகிணி நீயெல்லாம் உண்மையான தோழியே கிடையாது எனக் கூறி வித்யா உன் குடும்பத்தையே ஏமாத்துற நீ பேசாதே என்கிறார்.

சரி இனிமே உன் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன் எனக் கூறிவிடுகிறார். வித்யா ரொம்ப சந்தோஷம் கிளம்பு எனக் கூறிவிடுகிறார். வீட்டில் முத்து, மீனாவிடம் இந்த வேலையை பார்லர் அம்மா செஞ்சிருக்கதுக்கு தான் வாய்ப்பு அதிகமா இருக்கு உள்ளிட்ட சில ஆதாரங்களை கூறுகிறார்.

மேலும், சத்யாவிற்கு கால் செய்து கேட்க அவருக்கு தெரிஞ்தவரும் சிட்டி இதை செய்த போல இல்லை எனக் கூறிவிடுகிறார். உடனே முத்துவிற்கு வித்யா நியாபகம் வந்து விடுகிறது. மீனாவிடம் அந்த பொண்ணு போட்டோ இருக்கா எனக் கேட்கிறார். இல்லை எனக் கூற நாளை எடுத்து வரச் சொல்கிறார்.

அடுத்த நாள் காலை வித்யாவை ஃபாலோ செய்து வரும் ஆள் வந்து பேசிக்கொண்டு இருக்கிறார். இருவரும் காதலுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு அவர் செல்கிறார். அப்போ மீனா புகைப்படம் எடுக்கும் ஐடியாவுடன் வர வித்யா தன் காதலை சொல்லும் விஷயத்துக்காக அதை கவனிக்காமல் பேசிக்கொண்டு இருக்கிறார்.

வித்யாவின் புகைப்படத்தினை எடுத்துவிட்டு முத்துவிடம் கொடுக்க அவர் தாத்தா சொந்தக்காரரிடம் அனுப்பி அந்த பெண்ணா எனக் கேட்கிறார். அவர் வெளியில் போய் இருப்பதாகவும் வந்தவுடன் கேட்டு சொல்வதாக சொல்லிவிடுகிறார். அதற்காக முத்து காத்து இருக்கிறார்.

ரோகிணி வீட்டில் தனியாக இருக்க அவருக்கு முன் மீனா கருப்பு சேலையில் பயமுறுத்தி அடிக்க பாய்கிறார். ரோகிணி பயத்தில் கத்தி கதறுகிறார். மீண்டும் இது கனவாகி போக அடித்த அடியில் மனோஜே கீழே விழுந்து பதறி பயந்து போய் இருக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top