Connect with us

latest news

Siragadikka Aasai: சுயநலவாதியான சீதா… கல்யாணத்தால் மொத்தமாக டேமேஜாக போகும் மீனா… இனி காலிதான்!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

ரோகிணியிடம் ஒரு லட்சம் விஜயா கேட்டதற்கு அவர் கோபமாக இருக்கிறார். நானே அதை பரிசாக தான் கொடுத்தேன். எனக்கும் அது திருட்டு நகை என தெரியாது. என்னிடம் காசு கேட்டால் நான் என்ன செய்ய முடியும் என்கிறார். ஆனால் மனோஜ் அதை கவலைப்படாமல் வாங்கினவங்க கிட்ட காசு வாங்கி அம்மா கிட்ட கொடுக்க பாரு என்கிறார்.

எப்ப போய் கேக்க போற எனக் கேட்க நீ வரியா என மனோஜை கேட்கிறார். நான் வரல நீ முத்துவை கூப்பிட்டு போ அவன் தான் சரியா இருப்பான் என்கிறார். நான் தானே வாங்கினேன் எனக்கு காசை வாங்கிக் கொள்ள தெரியும் என ரோகிணி கூறிவிடுகிறார்.

முத்து மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். வீட்டில் விருந்து ஏற்பாடு செய்ய சொல்லி இருக்க நாளை ஒருவருக்கு அவசரமாக மாலை கொடுக்க வேண்டும் என மீனா கூறி விடுகிறார். வீட்டில் சீதா கவலையாக படுத்திருக்க தன் அப்பாவிடம் இதுவரை நான் அம்மாவிடம் எதையும் மறைத்ததில்லை என வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

பின்னர் மீனாவிற்கு கால் செய்து தான் தவறு செய்கிறோமோ என பயமாக இருப்பதாக கூறுகிறார். உன் கவலைக்குரியது. ஆனா உன் மாமா உனக்காக மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கிறார். அவருடைய அவசரத்தால் உன்னுடைய வாழ்க்கை வீணா போகிவிடுமோ என பயமாக இருப்பதாக கூறுகிறார்.

பின்னர் காலை சீதா தன்னுடைய அம்மாவிடம் வேலை எனச் சொல்லிவிட்டு ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு கிளம்பி செல்கிறார். மீனாவும் சீதாவிற்காக மாலை கட்டிக் கொண்டு எடுத்துச் செல்ல அதை பார்க்கும் முத்து நல்லா இருக்கே என அந்த மாலையை போட்டோ எடுக்கிறார்.

பின்னர் மீனாவிடம் தான் கொண்டு வந்து விடவா என கேட்க ஐஸ் பெட்டி இருக்கே என கூறி சமாளித்து விடுகிறார். பின்னர் சீதா மற்றும் அருணை ரிஜிஸ்டர் ஆபீஸில் சந்திக்கிறார் மீனா. இவர்கள் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் இனி முத்து என்ன செய்ய போகிறாரோ என்பது கேள்வியாக இருக்கிறது.

Continue Reading

More in latest news

To Top